இந்திய வரலாற்றில்.. மிகப்பெரிய அரசியல் திருப்பம்! உத்தர பிரதேசத்தில் பாஜகவை முந்தியது இந்திய கூட்டணி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசத்தில் மாபெரும் அரசியல் திருப்பம் ஏற்பட்டு உள்ளது. அங்கே பாஜகவை முந்திய இந்தியா கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸின் இந்தியா கூட்டணி 43 இடங்களில் முன்னிலை பெற்று அசத்தி உள்ளது. பாஜக கூட்டணி 36 இடங்களுக்கு சென்று உள்ளது .

உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 71 இடங்களில் வென்றது. பகுஜன் சமாஜ் 2019 தேர்தலில் போட்டியிடவில்லை. சமாஜ்வாதி 5 இடங்களில் வென்றது. காங்கிரஸ் வெறும் 2 இடங்களில் வென்றது.

Lok Sabha Election 2024 Lok Sabha Election Result 2024 BJP Congress 2024 2024

2024 லோக்சபா தேர்தல்: 2024 இந்தியப் பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 80 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை அனைத்து ஏழு கட்டங்களில் நடந்தது.அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன.

எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது.

ஆர்எஸ்எஸ் வேலை இல்லை: உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு ஆர்எஸ்எஸ் பெரிதாக வேலை பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் தேர்தல் நேரத்தில் வந்தன. பத்தாண்டுகள் மத்தியில் பாஜகவும், உத்தரபிரதேசத்தில் ஏழு ஆண்டுகளும் ஆட்சியில் இருந்த நிலையில், ஆர்எஸ்எஸ் வட்டாரங்களில் பாஜக மீது அதிருப்தி ஏற்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசாங்கம் "அவர்களுடையது" என்ற போதிலும், உத்தர பிரதேசத்தில் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் பெரிதாக தேர்தல் பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே குஜராத்தில் பாஜகவிற்கு ஆதரவாக ஆர்எஸ்எஸ் சரியாக பணிகளை செய்யவில்லை. அப்படி இருக்கத்தான் ஆர்எஸ்எஸ் தரப்பை குஷிப்படுத்த மோடி தனது பிரச்சார யுக்தியை மாற்ற தொடங்கினார். உதாரணமாக இஸ்லாமியர்களை தாக்கி கடுமையாக பேசினார். சில மேடைகளில் இஸ்லாமிய இடஒதுக்கீடு, தாலி பறிப்பு பற்றி எல்லாம் மோடி பேசினார். இதெல்லாம் தேர்தலில் பணிகளை செய்யாத ஆர்எஸ்எஸ் தலைவர்களை உற்சாகப்படுத்த மோடி களமிறங்கிய யுக்தி என்று கூறப்பட்டது.

ஆனால் ஆர்எஸ்எஸ் எதற்கும் தலை அசைக்கவில்லை. பாஜக தேர்தல்களில் வெற்றிபெற முக்கிய காரணம் பாஜக பிரச்சாரம் + ஆர்எஸ்எஸ் நடத்தும் லோக்கல் பிரச்சாரம். ஆனால் உத்தர பிரதேசத்தில் இந்த முறை பாஜகவிற்கு ஆதரவாக களப்பணிகளை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் செய்யாமல் ஒதுங்கினர்.

ராஜ்புத் எழுச்சி: முக்கியமாக பீகார், குஜராத், உத்தர பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை கவலைக்குரியதாக மாறி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்து வாக்குகளால் பெரும்பான்மை இடங்களை வென்ற குஜராத், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் நிலைமை மோசமாக மாறி உள்ளது.

ராஜ்புத் உள்ளிட்ட சில ஆதிக்க சாதியினர் அங்கே பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். இவர்கள் தங்கள் கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாகக் காட்டி பாஜகவிற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். முக்கியமாக ராஜபுத்திரர்கள், தியாகிகள் மற்றும் சைனிகள் உட்பட இந்த ஆதிக்க சாதியினர் குஜராத், உத்தரபிரதேசத்தில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

உத்தர பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது, பாஜகவை வீழ்த்த வாய்ப்புள்ள வேட்பாளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அங்கே ராஜ்புத் உள்ளிட்ட சத்திரிய சாதியினரின் பஞ்சாயத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் உத்தர பிரதேச லோக்சபா தேர்தலில் பாஜக எத்தனை இடங்களில் வெல்லும், எத்தனை வாக்கு சதவிகிதத்தை பாஜக வெல்லும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+