தொடரும் கொடூரம்! உத்தர பிரதேசத்தில் தலித் இளைஞர் காதில் சிறுநீர் கழித்த கொடூரன்.. என்ன நடந்தது
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் தலித் இளைஞனின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னுமே கூட பல கிராமங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில்களுக்கு அனுமதிக்க மறுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் இப்போது ஷாக் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் தலித் இளைஞன் ஒருவரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் இப்போது வரை இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 11ஆம் தேதி உபி-இல் உள்ள ஜுகைல் பகுதியில் நடந்துள்ளது.
இதில் பாதிக்கப்பட்ட நபரும் குற்றவாளியும் நண்பர்களாகவே இருந்துள்ளனர். இருப்பினும் அன்றைய தினம் அவர்கள் மது குடித்த நிலையில், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் ஒருவருக்கு ஒருவர் திட்டிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது தலித் இளைஞர் காதுகளில் அவர் சிறுநீர் கழித்துள்ளார்.
ஷாக் சம்பவம்: இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், சம்பவ இடத்திற்கு அதிகப்படியான போலீசார் விரைந்துள்ளனர். இதனால் வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அரசு அதிகாரிகளும் அங்கு விரைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஜவஹர் படேல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நடந்த போது பாதிக்கப்பட்ட நபர் குடிபோதையில் இருந்ததால், அவருக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. இருப்பினும், அங்கிருந்த சிலர் இதை வீடியோவாக பதிவு செய்த நிலையில், அது டிரெண்டானது. அதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
சிறுநீர் கழிக்கும் முன்பு அந்த நபரை ஜவஹர் படேல் கொடூரமாக தாக்கியதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் படேலையும் அவரது நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கச் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம்: முன்னதாக சில நாட்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசத்தில் பகீர் சம்பவம் ஒன்று நடந்தது. அங்கு சித்தி மாவட்டத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஷ்மத் ராவத் என்பர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பிரவேஷ் சுக்லா என்றும் அவர் அம்மாநில பாஜக நிர்வாகி என்றும் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து பலரும் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டார்
பாதிக்கப்பட்ட ஷ்மத் ராவத்தை நேரில் அழைத்த அம்மாநில முதல்வர் சவுஹான் அவரது கால்களைக் கழுவினார். மேலும், ஷ்மத் ராவத் தனது நண்பர் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையே இப்போது உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் அதேபோல ஒரு பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
4 கோடியை ஏப்பம் விட்ட ஆபீசர்ஸ்! தூத்துக்குடி துறைமுகத்தில் ஷாக்! இறந்த ஊழியர்களின் பென்சனில் மோசடி! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications