சீருடையில் வந்த மாற்றம்.. டெங்கு, சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த உத்தர பிரதேச அரசு அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய் பரவலை தடுக்கும் வகையில் உத்தர பிரதேச மாநில பள்ளிகளுக்கு புதிய வழிக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சீருடையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில் தற்போது டெங்கு உள்பட பிற காய்ச்சல்கள் பரவ தொடங்கி உள்ளன. உத்தர பிரதேசத்திலும் தற்போது டெங்கு, மலேரியா, சிக்குன்குனியாக உள்ளிட்ட நோய்கள் பரவி வருகின்றன.

Uttar Pradesh students wear full shirts, trousers as part of their school uniforms combat communicable diseases

இந்த நோயை கட்டுப்படுத்த அங்கு ஆட்சி செய்யும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்பாக பள்ளிகளில் மாணவ-மாணவிகளை டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா நோய்களில் இருந்து தற்காத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் வகையில் உத்தரப்பிரதேச அரசு மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது.

இந்த வழிக்காட்டுதல் நெறிமுறைகள் அனைத்தும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மாணவர்களின் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொசுக்கடியில் இருந்து மாணவர்கள் தற்காத்து கொள்ள முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனை முறைப்படி பின்பற்ற வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட உள்ளது. மேலும் இந்த புதிய சீருடை மாற்ற நடவடிக்கையை மேற்பார்டையிட ஒவ்வொரு பள்ளிக்கும் நோடல் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுதவிர மாணவ-மாணவிகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கல்வி இயக்குநரான டாக்டர் மகேந்திர தேவ் வெளியிட்டுள்ள சுற்றறிக்கைகயில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி நோய் தடுப்பு நடவடிக்கை குறித்தும் விழிப்புணர்வு ஏவழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் பள்ளிகளை சுற்றிய பகுதிகளில் தண்ணீர் தேங்கவிடாமல் தடுக்க வேண்டும். பள்ளிகளில் தூய்மை பணிகளை முறையாக செய்ய வேண்டும். கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்து எடுக்க வேண்டும் எனவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+