உதவிய கள்ளக்காதலன்.. ஆன்லைன் ஆர்டரில் வந்த அந்த பொருள்.. கணவரை தீர்த்து கட்டிய மனைவி.. ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பக்கத்து வீட்டு இளைஞருடனான கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை பெண் ஒருவர் கொலை செய்துள்ளார். இதற்காக அவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து விஷம் வாங்கியதும், அதன்பிறகு கணவரை கொல்ல முயன்ற முதல் முயற்சி தோல்வியடைந்த நிலையில் 2வது முயற்சியில் கொன்று நாடகமாடி இப்போது வசமாக சிக்கி உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத் அருகே உலாவு எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி பெயர் சசி தேவி. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

uttar-pradesh-woman-order-poison-through-e-commerce-platform-and-killed-husband-with-her-lover

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஒருவருக்கு 9 வயதும், இன்னொவருக்கும் 7 வயதும் ஆகிறது. சுனில் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

ஆனால் சமீபத்தில் அவர்களின் குடும்பத்தில் புயல் வீச தொடங்கியது. சுனில் செராமிக் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வேலை செய்து கிடைக்கும் பணத்தை அவர் தனது மனைவியிடம் கொடுப்பது இல்லை. மதுபானம் வாங்கி குடித்துள்ளார். மேலும் எப்போதும் இரவில் போதையிலேயே இருந்துள்ளார். இதனால் சுனில் மற்றும் சசி தேவி ஆகியோர் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக சுனில் மதுபான பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மாத்திரைகளை மருந்து எடுக்க தொடங்கினார். கடந்த மே மாதம் 13ம் தேதி மருந்து சாப்பிடுவதற்கு முன்பாக சசிதேவி, சுனிலுக்கு பால் வழங்கினார். அதனை குடித்த சுனிலுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி, மயக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டார். இதையடுத்து உடனடியாக பிரோசாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சுனில் உடலம் நலம் தேறி வீடு திரும்பினார். ஆனால் மறுநாள் மே 14ம் தேதி அவர் தயிர் குடித்த நிலையில் மீண்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுனில் இறந்தார்.

இதையடுத்து சுனில் உடல்நலக்குறைவால் இறந்ததாக குடும்பத்தினர் நினைத்தனர். இதையடுத்து மனைவி சசிதேவி கூறியதை தொடர்ந்து அவரது உடல் எரிக்கப்பட்டது. சுனிலின் சாவில் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. இதற்கிடையே தான் திடீரென்று சுனிலின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது சுனில் மறைந்த பிறகு அவரது மனைவியும், தனது மருமகளான சசிதேவி பக்கத்து வீட்டை சேர்ந்த 29 வயது நிரம்பிய யதுவேந்திர குமாருடன் நெருக்கமாக பழகியது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சுனிலின் தாய் துண்ட்லா போலீசில் புகார் செய்தார். தனது மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மகன் சுனிலை அவரது மனைவி சசிதேவியே கொன்று இருக்கலாம் என்றும் புகார் அளித்தார். இந்த புகார் சில நாட்களுக்கு முன்புவழங்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சசிதேவியை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்தன்மீதான குற்றச்சாட்டை மறைத்தார். ஆனால் போலீசார் சசிதேவி, யதுவேந்திர குமாரை பிடித்து விசாரித்தனர். அப்போது இருவரும் சுனிலை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சசிதேவி மற்றும் கள்ளக்காதலன் யதுவேந்தர் குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‛‛சுனில் போதைக்கு அடிமையான காலத்தில் சசிதேவிக்கு, பக்கத்து வீட்டு இளைஞர் யதுவேந்தர் குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இருவரும் இந்த உறவை தொடர வேண்டும் என்று நினைத்தனர். இதற்கு சசிதேவியின் கணவர் சுனில் இடையூறாக இருப்பதாக நினைத்தனர். இதனால் அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

அதன்படி ஆன்லைனில் ஆர்டர் போட்டு விஷத்தை வாங்கினர். யதுவேந்திர குமார் விஷத்தை தனது முகவரியில் வாங்கினார். அதன்பிறகு அதனை சசிதேவியிடம் வழங்கினார். மே 13ம் தேதி முதலில் அந்த விஷயத்தை பாலில் கலந்து சுனிலுக்கு, சசிதேவி வழங்கினார். வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அவர் உயிர் பிழைத்தார். முதல் கொலை முயற்சி மிஸ்ஸானது. இதையடுத்து 2வது முறையாக மறுநாளே சசிதேவி விஷத்தை தயிரில் கலந்து வழங்கினார். அதனை குடித்த சுனில் இறந்தார். அதன்பிறகு அவசரஅவசரமாக உடலை சசிதேவி எரித்து நாடகமாடிய நிலையில் இப்போது மாமியார் புகாரால் சிக்கியுள்ளார்'' என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+