நலத்திட்டங்களை அனைவருக்கும் கொண்டு சேர்க்க அதிரடி திட்டம்.. முழு வேகத்தில் களமிறங்கிய உ.பி அரசு!
லக்னோ: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் சேர்ந்து அனைத்து விவசாயிகளும் பலன் பெற விழிப்புணர்வு யாத்திரையை தொடங்கியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவி கொடுக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் குறைந்த அளவிலான விவசாயிகள்தான் இந்த திட்டத்தில் தங்களை இணைந்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும், மீதம் உள்ளவர்கள் விரைவில் இணைய வேண்டும் எனவும் இந்த யாத்திரை தொடங்கப்பட்டிருக்கிறது.
இந்த யாத்திரையின் பிரதான நோக்கம் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் விவசாயிகளை இணைப்பதாக இருந்தாலும், மாநில அரசின் பல்வேறு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் இந்த திட்டத்தை பயன்படுத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த யாத்திரை வரும் 26ம் தேதி வரை நடத்தப்படும். அதேபோல மாநிலம் முழுவதும் உதவி மையங்கள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் விவசாயிகள் பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், இந்த யாத்திரை தற்போது சூடுபிடித்திருக்கிறது. இந்த யாத்திரைக்கான பிரசாரங்கள் அதிகரித்திருக்கின்றன. அதேபோல யாதிரை செல்லும் இடங்களில் அந்தந்த மாவட்டத்தின் அரசு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர். அவர்கள் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களை திட்டத்தில் சேர்த்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications