அந்த கண்ண பாத்தாக்கா.. இன்ஸ்டா போஸ்ட்டில் விழுந்த இளசுகள்! இப்போ மோனலிசா பாலிவுட்டுக்கு போயிட்டாங்க!
லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ருத்ராட்சம் விற்றபோது கண்களால் இணையவாசிகளை கவர்ந்து இந்தியா முழுவதும் ஃபேமஸான 'ப்ரவுன் ப்யூட்டி என அழைக்கப்பட்ட மோனலிசா என்ற மோனிஷா போஸ்லே இந்திய சினிமாவில் கால் பதிக்கிறார். பாலிவுட் படம் ஒன்றில் அவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இளம் பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
ஆரம்பத்தில் சிகப்பு நிற ஆடையில் பெண் துறவி போலவே காட்சியளித்த அவரை 'பிரவுன் பியூட்டி' என பலரும் சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாக்கினர். பின்னர் அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்துூரைச் சேர்ந்த மோனிசா போஸ்லே என்பதும் திருவிழா காலங்களில் ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இந்த நிலையில் அவரை காண்பதற்காகவே பலரும் கும்பமேளாவுக்கு வரத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான யூடியூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர்கள் அவரைச் சுற்றி கேமராவோடு சூழத் தொடங்கினர். இதனால் அவரது வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. அது மட்டும் அல்லாமல் அவரது பாதுகாப்புக்கும் இடையூறு ஏற்பட்டதால் அவரது தந்தை அவரை சொந்த ஊரான இந்தூருக்கே அனுப்பி வைத்தார்.
இதற்கிடையே இந்துருக்கு சென்ற அவர் பியூட்டி பார்லர் ஒன்றில் மேக்கப் செய்து கொண்டு அதனை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். ஒரே வாரத்தில் அவருக்கு லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் கிடைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் சினிமாவில் கால் பதிக்கிறார் மோனலிசா என்று அழைக்கப்பட்ட மோனிஷா போஸ்லே. வெறும் 16 வயதான அவரை அவரது அழகிய கண்கள் காரணமாகவே தனது திரைப்படத்தில் நடிக்க வைக்க இருப்பதாக கூறி இருக்கிறார் பிரபல எழுத்தாளரும் இயக்குனருமான சனோஜ் மிஸ்ரா. தி டைரி ஆஃப் வெஸ்ட் பெங்கால் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள அவர் தற்போது மோனலிசாவை வைத்து டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மோனலிசாவை நேரில் சந்தித்த அவர் இது தொடர்பான படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். இதை அடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நர்மதை நதிக்கரையில் பூக்கள் மாலைகள் விற்று வந்தவரை ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாக்கி இருப்பதும் அவருக்கு பாலிவுட் வாய்ப்பு தேடி வந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications