தூங்கிய இளம்பெண்.. காலை சுற்றிய ராஜநாகம்.. அதுவும் 3 மணி நேரம்.! அடுத்து நடந்த சம்பவம்! ட்விஸ்ட்
லக்னோ: இளம்பெண் ஒருவர் எழுந்த போது அவரது கால்களில் நாகப்பாம்பு சுற்றியுள்ளது. அதுவும் சுமார் 3 மணி நேரம் இந்த ராஜநாகம் அவரது கால்களைச் சுற்றியபடியே இருந்துள்ளது.
பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். உலகின் மாவீரர்கள் கூட பாம்பின் சீற்றத்தைக் கண்டு அஞ்சாமல் இருக்க மாட்டார்கள். இந்த பாம்புகளிலேயே அதீத விஷம் கொண்டது என்றால் அது ராஜநாகம் தான்.

ராஜநாகத்தை பார்த்தால் பலரும் பல கிமீ தள்ளி ஓடி விடுவார்கள். அந்தளவுக்குக் கம்பீரமும் விஷமும் கொண்ட ஒரு பாம்பாக ராஜநாகம் இருக்கிறது. இதற்கிடையே ஒரு ஷாக் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
பாம்பு: உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா என்ற பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் எழுந்த போது அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். ஏனென்றால் அவரது காலை ராஜ நாகம் ஒன்று சுற்றி பிடித்துள்ளது. பாம்பை எடுக்க முயன்றால் எங்கு எது கடித்துவிடுமோ என அஞ்சிய அந்த பெண் அடுத்த செய்த சம்பவம் தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
உபி மாநிலம் தஹராவில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. மித்லேஷ் யாதவ் என்ற அந்த பெண் நேற்றைய தினம் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது எழுந்த சமயத்தில் அவரது காலில் ஏதோ ஒன்று அசாதாரணமாக இருந்ததை அவர் உணர்ந்துள்ளார். தனது காலில் பாம்பு சுற்றி இருந்ததைப் பார்த்த மித்லேஷ் பயத்தின் உச்சத்திற்கே சென்றார். என்ன செய்வது என்றே புரியாமல் அவர் பயந்துவிட்டார்.
பிரார்த்தனை: பாம்பு தன்னை கடித்துவிடக் கூடாது என்று அந்த பெண் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டார். ஏதோ கொஞ்ச நேரம் இல்லை. இப்படியே அவர் சுமார் 3 மணி நேரம் வரை பிரார்த்தனை செய்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் கூறுகையில், "நான் எனது இரண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்ததேன்.. காலை எழுந்த போது பாம்பு ஒன்று காலை சுற்றி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை
முதலில் குழந்தைகளை அங்கிருந்து அழைத்துச் செல்லும்படி கூறினேன். எனது தாய் குழந்தைகளை அழைத்துச் சென்றார். எங்கு பாம்பை எடுக்க முயன்றால் அது கடித்துவிடுமோ என்று பயமாக இருந்தது" என்றார். இதனால் அந்தப் பெண் சுமார் 3 மணி நேரம் பிரார்த்தனை செய்துள்ளார். சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னரே அந்த பாம்பு அவரை விட்டுச் சென்றுள்ளது.
அந்தப் பெண் மேலும் கூறுகையில், "பாம்பு என்பது சிவபெருமான் தான்.. எப்படி வந்ததோ அதேபோல என்னை விட்டு செல்லும்படி வேண்டினேன்.. இருப்பினும், ஆரம்பத்தில் அந்த பாம்பு என்னை விட்டுச் செல்லவில்லை. இதனால் எங்கு எனது உயிரே போய்விடுமோ என்றே நான் அஞ்சினேன்.. இருப்பினும் பிரார்த்தனை செய்வதை மட்டும் விடவில்லை. கூடவே எனது பக்கத்து வீட்டுக்காரர்களும் என்னுடன் இணைந்து பிரார்த்தனை செய்தனர்" என்றார்.
என்ன நடந்தது: பல மணி நேரம் ஆன பிறகும் பாம்பு அந்தப் பெண்ணை விடவே இல்லை. இதனால் ஒரு பக்கம் பிரார்த்தனை செல்ல மறுபுறம் அவர்கள் போலீசாரை அழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பாம்பு பிடிக்கும் நபரை அழைத்துத்துள்ளனர். இருப்பினும், அவர் வருவதற்குள் அப்போது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில், அந்தப் பாம்பு பெண்ணின் காலை விட்டுச் சென்றுள்ளது.
ராஜநாகம் தான் உலகிலேயே மிகவும் விஷமான பாம்பாக அறியப்படுகிறது. இருப்பினும், இந்த ராஜநாகம் அந்த வீட்டில் யாருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் தராமல் அங்கிருந்து அமைதியாக விட்டை விட்டு வெளியே சென்றுள்ளது. இது குறித்த தகவல்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications