Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யோகி-கட்கரி சந்திப்பு.. பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காவிட்டால்.. பிளான் பி.. தடதட நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பாஜக கையில் பிளான் பி ஒன்று இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

What is the plan B behind BJP if they don t get full majority in Lok Sabha elections

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.

370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.

பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.

தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதுவரை வெளியான கருத்து கணிப்புகளில் பாஜகவிற்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

கணிப்பு: கணிப்புகளில் பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைக்கும் என்றாலும் காங்கிரஸ் கட்சியோ பாஜகவிற்கு 200 இடங்களுக்கு குறைவாகவே கிடைக்கும் என்று கூறுகிறது. காங்கிரஸ் தலைவர்கள் மேடைக்கு மேடை இதை கூறி வருகின்றனர்.

பிளான் பி; லோக்சபா தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் பாஜக கையில் பிளான் பி ஒன்று இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் இணையத்தில் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.

அதன்படி நிதின் கட்கரி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரில் ஒருவரை பிரதமராக அறிவித்து கூட்டணி ஆட்சியை அமைக்க பாஜக முயலலாம் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்காத பட்சத்தில் பாஜக இதை செய்யும் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

இவர்கள் இருவரும் நேற்று முதல்நாள் சந்தித்த நிலையில் இந்த விவாதம் எழுந்துள்ளது. யோகி பிரதமர் ஆக கூட்டணி கட்சிகள் பெரிதாக விரும்பாது என்ற நிலையில்.. லாஜிக் இல்லை என்றாலும் இதுதான் பாஜகவின் பி என்று நெட்டிசன்கள் கிசு கிசுகின்றனர்.

பாஜகவில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு பதிலாக 2019 தேர்தலில் முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்தது. நிதின் கட்கரியின் செயல்பாடுகளும் கூட அப்படித்தான் இருந்தது. இவருக்கு ஆர்எஸ்எஸ் தரப்பில் பெரிய ஆதரவு இருப்பதாகவும் தகவல்கள் வந்தது.

ஆனால் அப்போது பாஜக தனி மெஜாரிட்டி பெற்றது. இப்போது 2024 லோக்சபா தேர்தல் வரும் நிலையில் மீண்டும் கட்கரி பக்கம் போகஸ் திரும்பி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+