பல ஆயிரம் இந்துக்களை மதம் மாற்றிய ஜலாலுதீன் பாபா.. யார் இவர்? பின்னணியில் துருக்கி - பாகிஸ்தான்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 1,500க்கும் அதிகமான பெண்கள் உள்பட பல ஆயிரம் இந்துக்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றிய புகாரில் மதகுரு ஜலாலுதீன் சங்கூர் பாபா என்வரை பயங்கரவாத எதிர்ப்பு படை பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் தான் ரூ.500 கோடி சட்டவிரோத பணத்தில் அவர் பிரமாணர்கள், ஓபிசிக்கள், எஸ்சிக்கள் என்று ஜாதி பார்த்து மதம் மாற ஒருவருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கி உள்ளது தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பால்ராம்பூர் மாவட்டம் மத்பூரை சேர்ந்தவர் ஜலாலுதீன் சங்கூர் பாபா. இவர் இந்துக்களை இஸ்லாம் மதத்துக்கு மாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக உத்தர பிரதேச மாநில பயங்கரவாத ஒழிப்பு படையினர் விசாரணையை தொடங்கினர்.

இந்த விசாரணையில் தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ஜலாலுதீன் சங்கூர் பாபாவை பயங்கரவாத ஒழிப்பு படையினர் கைது செய்து நிலையில் அதன் பின்னணி குறித்த விவரம் வருமாறு:
அதாவது உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் சமீபத்தில் இந்து அமைப்பு சார்பில் தாய் மதம் திரும்பும் நிகழ்ச்சி நடந்தது. இஸ்லாம் மதத்துக்கு மாறிய பலரும் இந்து மதத்துக்கு திரும்பினர். அப்போது ஜலாலுதீன் என்ற சங்கூர் பாபா தான் தங்களை மூளைச்சலவை செய்தும், பணம் வழங்கியும் மதம் மாற்றியதாக பலரும் குற்றம்சாட்டினர். இதுபற்றி பயங்கரவாத ஒழிப்பு படை போலீசார் விசாரித்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவரிடம் ரூ.500 கோடி ரூபாய்க்கும் மேல் சட்டவிரோத பணம் புழங்கியது தெரியவந்துள்ளது. அமலாக்கத்துறையும் களம் இறங்கி உள்ளது. ஒரு காலத்தில் தெரு தெருவாக சுற்றி மோதிரம், ரத்தின கல் வியாபாரம் பார்த்தார். மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவுக்கு அடிக்கடி சென்றார். அதன்பிறகு தன்னை தானே முஸ்லிம் மதகுருவாக அறிவித்து கொண்டார்.
உடல் நல பிரச்சனைகளை வருபவர்களை அவர்களை தேடி சென்று சந்தித்த பிறகு குணமானதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிரபலம் அடைந்தார். இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்கள், சீக்கியர்களும் அவரை நோக்கி சென்றனர். அப்போது அவர் மூளைச்சலவை செய்து இஸ்லாம் மதத்துக்கு மாற்றி வந்துள்ளதாக கூறப்டுகிறது. ஏழையானவர்கள், கணவரை இழந்த பெண்கள், தாய் - தந்தையை இழந்தவர்களை குறிவைத்து அவர் மதமாற்றம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மதம் மாறியவர்களுக்கு பணத்தையும் அள்ளி கொடுத்துள்ளார்.
பிராமணர்கள், சீக்கியர்கள் மதம் மாறினால், ஒவ்வொருவருக்கும் தலா 15 அல்லது 16 லட்சம் ரூபாய் வழங்கினார். அதுவே ஓபிசி இந்துக்கள் முஸ்லிம் ஆக மாறும் போது, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 10 முதல் 12 லட்சம், எஸ்சி இந்துக்கள் என்றால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளதாக கூறபப்டுகிறது. 1,500 இந்து பெண்கள் உள்பட மொத்தம் 4000 இந்துக்களை அவர் இஸ்லாம் மதத்துக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேலும் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்துள்ளது. சட்டவிரோதமாக அந்த பணம் கிடைத்துள்ளது.ஜலாலுதீன் என்ற சங்கூர் பாபா, இந்துக்களை முஸ்லிம்களாக மாற்றி வருகிறார் என்பதை அறிந்த முஸ்லிம் நாடுகள் அவருக்கு உதவ முன் வந்தன. குறிப்பாக முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பாகிஸ்தான், சவுதி, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருப்பவர்கள் சங்கூர் பாபாவுக்கு பணத்தை கொட்டினர்.
அரசின் கண்ணில் மண்ணை தூவி விட்டு சட்டவிரோத பணத்தை லாவகமாக தனது பாக்கெட்டுக்கு கொண்டு வந்தார் சங்கூர் பாபா. இதன்மூலம் மகாராஷ்டிராவில் பல கோடி மதிப்பில் நிலம் வாங்கி உள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஒரு கல்லூரியும் இருக்கிறது. மதரசாவும் நடத்தி வருகிறார். ஆடம்பர பங்களா, புதிய ரக கார்கள் வாங்கி வைத்துள்ளதோடு, இந்துக்கள், சீக்கியர்களை தொடர்ந்து மதம்மாற்றி வந்துள்ளார். தற்போது அவரை போலீசார் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications