நாட்டை உலுக்கிய சம்பவம்! உபி ஆன்மீக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் யார்? வெளியான பரபர தகவல்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சாமியார் போலே பாபாவின் ஆன்மீக நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 150 பேருக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கான காரணமான ஆன்மிக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் போலே பாபா யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் சாமியார் போலே பாபாவின் (Bhole Baba) ஆன்மீக நிகழ்ச்சி இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுகணக்கானோர் பங்கேற்று இருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேற முயன்றுள்ளனர்.

122 பேர் உயிரிழப்பு: இதனால் அங்கு கடுமையான நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் நகரவே முடியாத அளவுக்கு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. அதேபோல ஒரே ஒரு கேட் மட்டுமே இருந்து இருக்கிறது. மக்கள் ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயற்சித்ததால், நெரிசலில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்: மேலும் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சாமியார்?: மேலும் உயிரிழ்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணத்தையும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ஒட்டு மொத்த தேசத்தையே உலுக்கிய இந்த சம்பவத்திற்கான காரணமாக நிகழ்ச்சியை நடத்திய சாமியார் நராயண சாகர் ஹரி யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. போலோ பாபா என்று அழைக்கப்படும் இவர் உத்த பிரதேச மாநிலத்தில் உள்ள எடா மாவட்டத்தின் படியாலி தாலுகாவில் உள்ள பஹதூர் கிராமத்தை சேர்நதவர்.
உபி ஹத்ராஸில் மருத்துவமனை முழுவதும் நிரம்பி வழியும் உடல்கள்.. ஒரே ஒரு மருத்துவர் இருந்ததாக புகார்
வட மாநிலங்களில் தெரியாதவர்களே இல்லை: உளவுத்துறையில் பணியாற்றியதாக கூறும் இவர் தனது 26 வயதில் வேலையை உதறி தள்ளிவிட்டு ஆன்மிக சொற்பொழிவுகளை வழங்க தொடங்கியுள்ளர். நாடு முழுவதும் இவருக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்களாம். குறிப்பாக வடக்கு உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டர்கள் என்கிறார்கள்.
சமூக வலைத்தள கணக்கு கிடையாது: தற்போதைய காலகட்டத்தில் பல சாமியார்களும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார்கள். ஆனால், இவர் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் எதையுமே வைத்து இருக்கவில்லை. இதனால், வட இந்தியா அளவுக்கு நாட்டின் பிற பகுதிகளில் போலோ பாபா அவ்வளவு பரிட்சயமாக இல்லையாம். போலோ பாபாவின் நிகழ்ச்சி உத்தர பிரதேசத்தின் அலிகாரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.
உ.பி ஹத்ராஸில் சாமியார் பிரசங்க நிகழ்ச்சியில் பயங்கர கூட்ட நெரிசல்.. பலி எண்ணிக்கை 122 ஆக அதிகரிப்பு!
கொரோனா காலத்தில் கூட: இதில் நூற்றுக்கானவர்கள் கலந்து கொள்வது வாடிக்கையாக உள்ளதாம். நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கும் இந்த ஆன்மீக நிகழ்ச்சியில் தன்னார்வர்களே உனவு, குடிநீர் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள். கொரோனா பெருந்தொற்று கால கட்டத்தில் கட்டுப்பாடுகள் இருந்த சமயத்திலும் இவர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்து இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications