உத்தர பிரததேசத்தில் இருந்து கேபினட்டில் இடம் பெற போவது யார்? யோகிக்கு ட்விஸ்ட் வைக்கும் மோடி?
லக்னோ: தொடர்ந்து 3-வது முறையாக நரேந்திர மோடி இன்று பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். அவருடன் 30 பேர் வரை மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளனர். இந்நிலையில் மோடியின் 3.0 ஆட்சியின் மத்திய அமைச்சரவையில் உத்தர பிரதேசத்தில் இருந்து யாரெல்லாம் இடம்பெற வாய்ப்புள்ளது? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. மத்தியில் ஆட்சியை பிடிக்க 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. இதனால் கூட்டணி கட்சிகளிடம் உள்ள 52 எம்பிக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பிரதமராக பொறுப்பேற்க உள்ளார்.

அவருடன் பாஜக எம்பிக்கள், கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் என மொத்தம் 30 பேர் வரை மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்களுக்கு நரேந்திர மோடி இன்று தேநீர் விருந்து அளித்தார்.
இந்த தேநீர் விருந்தில் பங்கேற்றவர்களுக்கு தான் மத்திய அமைச்சராக இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி உத்தர பிரதேசத்தில் யாரெல்லாம் அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளது என்பது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்..
உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை கடந்த முறை பாஜகவிற்கு பெரும் கை கொடுத்தது. ஆனால், இந்த முறை 80 தொகுதிகளில் 33 தொகுதிகள் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. வட இந்திய மாநிலங்களில் பாஜக பெரிதும் எதிர்பார்த்த மாநிலம் உத்தர பிரதேசம்தான். ஆனால், அங்கு கிடைத்த பெரிய அடியே பாஜகவிற்கு தனிபெரும்பான்மை கிடைக்காமல் போக முக்கிய காரணமாக அமைந்தது.
இதனால், உத்தர பிரதேசத்தில் இருந்து மோடியின் 3.0 வில் இடம் பெற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உறுதியாக இந்த தகவல் தெரியவராவிட்டாலும் கூட சில எம்பிக்கள் பெயர் அமைச்சர் பொறுப்புக்கு அடிபடுகிறது. உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அப்னா தளம் (மதசாரபற்ற) கட்சியின் அனுப்ரியா படேல் மற்றும் ஜெயந்த் சவுத்ரி,
பாஜகவின் புதிய கூட்டாளியான ராஷ்டிரிய லோல் தளம் கட்சியின் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பிலிபட் தொகுதி எம்.பியும் தற்போது யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக உள்ள ஜிதின் பிரசாதாவும் மோடி கேபினட்டில் இடம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.
யோகி அமைச்சரவையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஜிதின் பிரசதா, மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்கலாம் என்று கசிந்துள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இது மட்டுமின்றி குர்மி இன மக்களின் வாக்குகளை மனதில் வைத்து பங்கஜ் சவுத்ரி (மகராஜ்கஞ்ச் கட்சி) எஸ்.பி சிங் பாகேல் (ஆக்ரா), ஷாக்ஷி மகராஜ் (உன்னோவ்), முகேஷ் ராஜ்புத் (பருக்காபாத்) பாபுராம் நிஷாத் மற்றும் பி.எல்.வெர்மா ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.
கடந்த முறை உத்தர பிரதேசத்தில் இருந்து மத்திய அமைச்சரவையில் 12 பேர் இடம் பிடித்தனர். தற்போது மோடியின் 3.0 வில் இந்த எண்ணிக்கை பாதியாக குறையும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறர்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications