லோக்சபா தேர்தலில் தோற்றது ஏன்? 6 காரணங்களை லிஸ்ட் போட்டு தலைமைக்கு அனுப்பிய உபி பாஜக
லக்னோ: லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு உ.பியில் ஏற்பட்ட பின்னடைவே காரணம் என சொல்லப்படுகிறது. தோல்விக்கு யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கையே காரணம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதற்கு மத்தியில் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்த ரிபோர்ட்டை மத்திய தலைமைக்கு உத்தர பிரதேச பாஜக அனுப்பி வைத்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது. பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்க முடியாததற்கு உத்தர பிரதேசத்தில் அக்கட்சிக்கு கிடைத்த பெரும் பின்னடைவே காரணமாக அமைந்தது.

36 தொகுதிகளில் மட்டுமே: பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தர பிரதேசத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாடி 43 இடங்களில் வெற்றி பெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி 36 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டில் பாஜகவிற்கு 64 இடங்கள் கிடைத்தன. ஆனால், இந்த தேர்தலில் இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக குறைந்தது.
கருத்து வேறுபாடு: ஆளும் கட்சியாக இருந்தும் உத்தர பிரதேசத்தில் கணிசமான இடங்களை கோட்டை விட்டது அக்கட்சிக்கு பெரும் அடியாக அமைந்தது. லோக்சபா தேர்தலில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த பாஜக தலைமை, கட்சியின் மாநிலத் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும் துணை முதல்வருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
15 பக்க அறிக்கை: இதனிடையே, உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னடைவை சந்தித்தது ஏன் என்பது குறித்து கட்சி தலைமைக்கு மாநில பாஜக விரிவான அறிக்கையை சமர்பித்து இருக்கிறதாம். 15 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்டு பாஜக சறுக்கியது எதனால், என்ற விரிவான அறிக்கையை கட்சி தலைமையிடம் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
6 காரணங்கள் என்னென்ன?: இந்த அறிக்கையில், பாஜகவின் வாக்கு சதவிகிதம் சரிந்ததற்கு 6 காரணங்களை அடுக்கப்பட்டுள்ளதாம்.. கட்சியினருக்கு இடையே ஒற்றுமை இல்லாதது, அரசு தேர்வுகளில் அடிக்கடி வினாத்தாள் கசிந்தது.. அரசு பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்தியது, இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன் வைத்த காரணம் உள்ளிட்டவையே தோல்விக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாம்.. இந்த அறிக்கையில் பாஜக வாக்கு விகிதம் 8 சதவிகிதம் குறைந்து இருப்பதாகவும், மத்திய தலைமை உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.
யோகி ஆதித்யநாத் காரணமா?: உத்தர பிரதேசத்தில் பாஜக பின்னடைவு சந்தித்தது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் அக்கட்சி எம்.எல்.ஏக்கள் பலரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கையே இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம் என்று சொல்லியிருக்கிறார்கள்.. யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான பாஜக எம்.எல்.ஏக்கள் , துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் இனி வரும் தேர்தல்களை சந்திக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
மாற்றப்படுகிறாரா?: இதனால், உத்தர பிரதேச பாஜகவிற்குள் உள்கட்சி பூசல் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, டெல்லி சென்ற கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றப்படலாம் அல்லது உ.பி. பாஜக தலைவர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் உத்தர பிரதேச அரசியலில் ஹை டென்ஷன் நிலவுகிறது.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications