Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மனைவி இருக்கும்போதே.. மருமகளை படுக்கைக்கு அழைத்த நபர்! அப்புறம் நடந்த பயங்கரம்! உயிரே போச்சே

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் மருமகளை தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி கட்டிய மனைவியை அடித்து 43 வயது நிரம்பிய நபர் துன்புறுத்தினார். இதையடுத்து மருமகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கணவரையே, அந்த பெண் கொன்று நாடகமாடிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் படான் பகுதியை சேர்ந்தவர் தேஜேந்தர் சிங் (வயது 43). இவரது மனைவி மிதிலேஷ் தேவி. இந்நிலையில் தான் கடந்த 14ம் தேதி தேஜேந்தர் சிங் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது.

Wife Uttar Pradesh Woman killed her husband due to infatuation with daughter-in-law

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மிதிலேஷ் தேவி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தேஜேந்தர் சிங்கின் கழுத்து வெட்டப்பட்டு இருந்ததால் அது கொலை என போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து போலீசார் தேஜேந்தர் சிங்கின் மனைவியான மிதிலேஷ் தேவியிடம் விசாரித்தனர். அப்போது அவர் தனக்கு எதுவும் தெரியாது. கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதை நம்பிய போலீசார் தேஜேந்தர் சிங்கை கொலை செய்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தான் போலீசாருக்கு திடீரென்று ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது தேஜேந்தர் சிங்கின் மனைவி மிதிலேஷ் தேவி அவ்வப்போது பதற்றமடைவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் அவர் மீது சந்தேகம் எழுந்தது. அதாவது கணவரை கொன்றுவிட்டு அவர் நாடகமாடலாம் என போலீசார் நினைத்தனர். இதையடுத்து மிதிலேஷ் தேவியை அழைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அப்போது மிதிலேஷ் தேவி தனது கணவர் தேஜெந்தர் சிங்கை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் கொலை தொடர்பாக மிதிலேஷ் தேவி கூறிய தகவல் போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. அதாவது மிதிலேஷ் தேவிக்கு 19 வயது நிரம்பிய மருமகள் இருக்கிறார்.

இந்த மருமகள் மீது தேஜேந்தர் சிங்கிற்கு ஆசை ஏற்பட்டுள்ளது. இதனை மனைவி மிதிலேஷ் தேவியிடம் அவர் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் திஜெந்தர் சிங்கை கடுமையாக கண்டித்துள்ளார். மேலும் அவரை திட்டியுள்ளார். இருப்பினும் மருமகள் மீதான மோகம் திஜெந்தர் சிங்கிற்கு போகவில்லை. அதோடு, மருமகளை தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தும்படி அவர் அடிக்கடி மிதிலேஷ் தேவியிடம் கூறி சண்டையிட்டு அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனால் மிதிலேஷ் தேவி மனமுடைந்துள்ளார். இதையடுத்து தேஜேந்தர் சிங் ஆகஸ்ட் 14ம் தேதி இரவில் வீட்டுக்கு வெளியே போடப்பட்டு இருந்த கட்டிலில் தேஜெந்தர் சிங் இரவில் படுத்து தூங்கியுள்ளார். அப்போது மரம் அறுக்கும் ரம்பத்தை எடுத்து தேஜேந்தர் சிங்கின் கழுத்தை அறுத்து மிதிலேஷ் தேவி கொலை செய்துள்ளார். பிறகு கொலையை மறைக்க நினைத்த அவர் மர்மநபர்கள் கொலை செய்துவிட்டதாக போலீசாரிடம் கூறி நாடகமாடியது தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+