நடு ராத்திரியில்.. ஓடும் பஸ்ஸில்.. டிரைவர் செய்த அக்கிரம்.. கதறி துடித்த பெண்!
ஓடும் பஸ்ஸில் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் டிரைவர்
லக்னோ: ஸ்லீப்பர் கோச் பஸ்ஸில், கடைசி சீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை அந்த பஸ்ஸின் டிரைவரே பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
நாளுக்கு நாள் உத்தரபிரதேசத்தில் ஏகப்பட்ட வன்முறைகள் பெருகி வருகின்றன.. கொலை, கொள்ளை, பலாத்காரங்கள் நடைபெறும் மாநிலங்களில் முதன்மையாக உள்ளது உபி-தான்.

பெண்களை பலாத்காரம் செய்வதுடன், அவர்களை அப்படியே உயிரோடு எரித்து கொல்வதும் இங்கு சாதாரணமாக நடந்து வருகிறது.. லாக்டவுன் சமயத்திலாவது இந்த மாதிரி கொடுமைகள் நடக்காமல் இருக்கும் என்று பார்த்தால், அப்போதும் வழக்கம்போலவே எல்லை மீறல்கள் உள்ளன.
சில தினங்களுக்கு முன்பு ஒரு பெண் தன்னுடைய 2 குழந்தைகளை அழைத்து கொண்டு ஒரு பஸ்ஸில் ஏறி உள்ளார்.. உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரில் இருந்து கவுதம் புத்தா நகருக்கு இவர் செல்வதற்காக அந்த பஸ்ஸில் ஏறினார்.. குழந்தைகள் இருப்பதால் அவர்கள் தூங்குவதற்கு வசதியாக படுக்கை வசதியுடன் கூடிய பஸ்ஸில் பயணம் செய்தார்.
இவரது கணவர் நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாராம்.. இவ்வளவு காலம் லாக்டவுன் என்பதால், இப்போதுதான் பஸ்கள் விடப்பட்டுள்ளன.. அதனால், கணவரை பார்ப்பதற்காக அந்த பெண் சென்றுள்ளார்.
இவருக்கு பஸ்ஸில் கடைசி படுக்கை ரிசர்வ் செய்யப்படவும் அங்கு படுத்து குழந்தைகளுடன் தூங்கினார்.. லக்னோ-மதுரா இடையே பஸ் வரும்போது, அந்த பெண்ணை டிரைவர்களில் ஒருவரே பலாத்காரம் செய்துள்ளார்.. வெளியில் இதை பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் டிரைவர் மிரட்டி இருக்கிறார். இத்தனைக்கும் அந்த பஸ்ஸில் மற்ற பயணிகளும் இருந்துள்ளனர்.
இரவு நேரம் என்பதால் எல்லாரும் நன்றாக தூங்கி கொண்டிருந்திருக்கிறார்கள்.. ஓடும் பஸ்ஸில் இந்த அக்கிரமம் தெரியவே இல்லை. கவுதம் புத்தா நகருக்குள் பஸ் வந்ததும், அந்த பெண் நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.. நடந்தவைகள் குறித்து புகாரும் அளித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த டிரைவரை கைது செய்தனர்... இந்த கொடுமைக்கு கண்டக்டர் உட்பட மேலும் 2 பேருக்கு தொடர்பு உள்ளதாகவும் தெரிகிறது. ஆனால் அவர்கள் எங்கே என்றே தெரியவில்லை.. போலீசார் தேடி வருகிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications