"ஈவ் டீசிங்.." தட்டிக் கேட்ட பெண்! வீடு புகுந்து தாக்கிய 13 கொடூரர்கள்! ஆடைகளை கிழித்து அட்டூழியம்
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
லக்னோ: ஆக்ராவில் ஈவ் டீசிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் ஒருவரை, ஆண்கள் சிலர் தாக்கி ஆடைகளைக் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலியல் ரீதியில் பெண்கள் மீதான குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்தே உள்ளது.
இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள போதிலும் குற்றங்கள் குறையவில்லை. இதற்கிடையே அதேபோல ஒரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தில் ஆக்ராவில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஈவ் டீஸிங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து ஒன்றாக அடித்துத் தாக்கியுள்ளனர். மேலும், 30 வயதான அந்த பெண்ணின் ஆடைகளையும் கலைந்துள்ளனர். கடந்த மார்ச் 9ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் இப்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஈவ் டீசிங்
அன்றைய தினம் இரண்டு ஆண்கள் அந்த பெண்ணை ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், கோபமடைந்து அவர்களிடம் சத்தம் போட்டுள்ளார். இதனால் கடுப்பான அந்த இளைஞர்கள், தங்கள் 11 நண்பர்களை அங்கே அழைத்து வந்துள்ளனர். கையில் பயங்கர ஆயுதங்களுடன் அந்த இளைஞர்கள் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அங்கிருந்த அந்த பெண்ணையும் அவர்களின் குடும்பத்தினரையும் அந்த கும்பல் பயங்கரமாகத் தாக்கியுள்ளது.

ஆடைகள் கிழித்துத் தாக்குதல்
அந்த இளைஞர்கள் அந்த பெண்ணின் ஆடைகளையும் கிழித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனப் பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டியுள்ளனர். இருப்பினும், அந்த பெண் துணிச்சலாக போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 13 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேடுதல் வேட்டை
அந்த 13 பேரும் இப்போது தலைமறைவாக உள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட 13 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இது குறித்து விரிவான விசாரணை தொடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அளித்த தகவல்களின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதேபோல சனிக்கிழமை குர்கிராமில் ஒரு ஷாக் மச்பவம் நடைபெற்றது.

பலாத்காரம்
அங்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பெண்ணை இரண்டு பேர் கூட்டுப் பலாத்காரம் செய்தனர்.. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த பெண், டெல்லியில் தனது சகோதரியுடன் வசித்து வருகிறார். அவரை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், வேலை வாங்கி தருவதாகக் கூறி குருகிராமில் உள்ள அவரது பிளாட்டுக்கு அழைத்துள்ளார். அப்போது அவரது கூல் டிரிங்ஸில் மயக்க மருந்துகளைக் கலந்துள்ளார். அதன் பிறகு அந்த நபர் தனது நண்பருடன் சேர்ந்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இந்தச் சம்பவமும் அங்குப் பரபரப்பைக் கிளப்பியது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications