வளர்ச்சியை விரும்பாதவர்களால்தான் நாடு பிளவுபடுகிறது.. எதிர்க்கட்சிகள் மீது யோகி சரமாரி விமர்சனம்
லக்னோ: வளர்ச்சியை விரும்பாதவர்கள் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சித்த அவர், வளர்ச்சியை விரும்பாதவர்கள் நாட்டை பிளவுபடுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடு தழுவிய பிரச்சாரமான 'விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா' நேற்று லக்னோவை வந்தடைந்தது. இதில் பங்கேற்று பேசிய போது அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "அடிமை மனப்பான்மையை ஒழிக்க வேண்டும். நம் பாரம்பரியத்தைப் பற்றி நாம் பெருமை கொள்ள வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் முயற்சிகள் வளர்ச்சிப் பாதைக்கு தடையாக இருக்கின்றன. வளர்ச்சியை விரும்பாதவர்கள் வாரிசு அரசியலையும், சாதி அரசியலை கொண்டு வளர்ச்சியை தாமதப்படுத்துகிறார்கள். ஏழை எளிய மக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் நலன்களை முந்திய அரசுகள் எப்போதும் கணக்கில் கொண்டதில்லை.
பிரதமர் மோடியின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சியில் நாடு முழுவதும் 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆயுஷ்மான் பாரத் திட்டம் மூலம் 50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். உ.பியில் மட்டும் 10 கோடி பேர் பயனடைந்துள்ளனர்" என்று பேசினார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications