வேலைவாய்ப்பில் புதிய சாதனை.. ஒன்றரை மாதங்களில் 10,000 இளைஞர்களுக்கு பணி ஆணை! அசத்தும் உ.பி அரசு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தரம் உயர்த்தி வரும் நிலையில், தற்போது மருத்துவ துறை சார்ந்த வேலைவாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தில் யோகி ஆதித்யநாத் அரசு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது கடந்த 1.5 மாதங்களில் மட்டும் 10,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை சுகாதார துறையில் அரசு உறுதி செய்துள்ளது. இந்தியாமிஷன் ரோஸ்கர் எனும் திட்டம் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச துணைப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 1573 ஏஎன்எம் சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று பணி நியமனக் கடிதங்களை வழங்கினார்.

Yogi Adityanath government created 10 thousand new job opportunities in one and a half months in medical sector

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிதாக நியமனக் கடிதங்களைப் பெற்றவர்களின் முகங்களில் மகிழ்ச்சி தெரிகிறது. இந்த பாரபட்சமற்ற அரசின் திட்டங்களால் இளைஞர்களின் கனவுகள் நிஜமாகி வருகின்றன. சுகாதாரத் துறையில் மட்டுமே கடந்த ஒன்றரை மாதங்களில் 10,000க்கும் மேற்பட்ட நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. வேலை வாய்ப்புகளை பெற்ற எவரும் இந்த வேலைக்காக பணத்தை கொடுக்கவில்லை. இவர்கள் அனைவரும் தகுதியின் அடிப்படையில்தான் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள்தான் நாட்டின் எதிர்காலம். இவர்கள் நமது மாநிலத்திற்காக சிறப்பாக பணியாற்றுவார்கள். இவர்களின் முழு திறமையும் நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பயன்படும்" என்று கூறியுள்ளார். ஏற்கெனவே மாவட்டம்தோறும் ஓர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை எனும் திட்டத்தை அறிவித்திருந்த யோகி ஆதித்யநாத், அதை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் பணி ஆணை பெற்றவர்கள் யோகி ஆதித்யநாத்க்கு நன்றி தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+