சிறிய நகரங்களை மேம்படுத்த ரூ.100 கோடி! ஆஸ்பிரேஷன் திட்டத்திற்கு அனுமதியளித்தது யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மிகவும் பின்தங்கிய நகர்ப்புற அமைப்புகளை மேம்படுத்த ஆஸ்பிரேஷன் சிட்டி திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அனுமதியளித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆஸ்பிரேஷன் சிட்டி திட்டத்தை அறிவித்துள்ளார்.20,000 முதல் 1 லட்சம் வரை மக்கள் தொகை கொண்ட மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய 100 நகர்ப்புற அமைப்புகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் கடந்த 12ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "உத்தரப் பிரதேசத்தை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார்.
இதற்கு நகரங்கள் மிக முக்கிய பங்களிக்கும். எனவேதான் இந்த ஆஸ்பிரேஷன் சிட்டி திட்டத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார். இந்த திட்டத்தின் மூலம் வரலாற்று ரீதியிலான சிறிய நகரங்களை கணக்கில் கொண்டு அதன் திறனை மேம்படுத்துவதுதான் இலக்காகும். இந்த நகரங்களில் தற்போது மாநில அரசின் திட்டங்கள் மூலம் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆஸ்பிரேஷன் திட்டம் மூலம், மத்திய அரசின் பங்களிப்பும் இந்த நகரங்களின் வளர்ச்சியில் இருக்கும். இதற்காக ஏற்கெனவே ரூ.100 கோடி அளவுக்கு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications