சிலிண்டர் மானியம் தாய்மார்களுக்கு வழங்கப்பட்ட சிறந்த பரிசு! உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பாராட்டு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: சமையல் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியத்தை மத்திய அரசு அறிவித்த நிலையில், "நாட்டின் மில்லியன் கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு மதிய அரசு கொடுத்த சிறப்பு பரிசு இது" என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

ரக்‌ஷா பந்தன் பண்டிகையை சிறப்பிக்கும் விதத்தில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுகிறது என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், "ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாளாகும். கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம்" என்று தெரிவித்திருந்தார்.

Yogi Adityanath has said that the cylinder grant is the best gift given to mothers across the country

ரக்‌ஷா பந்தன் கொண்டாட்டம் காரணமாக வட மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியான நாளை வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பேசிய யோகி ஆதித்யநாத், "சகோதரதுவத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் 14 மாவட்டங்களில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டதும் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடதான். இதனைத் தொடர்ந்து சிலிண்டருக்கு ரூ.200 மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய எரிவாயு இணைப்புகளை வழங்குவதற்கும் முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுபோன்ற முயற்சிகளாலும், திட்டங்களாலும் நாட்டின் மில்லியன் கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+