நலத்திட்டங்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதுதான் உ.பி அரசின் லட்சியம்! யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கும் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை விவசாயிகளிடம் மேலும் விரிவாக கொண்டு சேர்க்க இன்று சிறப்பு பிரசாரத்தை உத்தரப் பிரதேச மாநில அரசு நடத்துகிறது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி அதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்ற வருகிறது. இந்நிலையில் யோகி முதலமைச்சராக பதவியேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. காரணம் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இதுவரை யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் நீடித்ததில்லை. அந்த வகையில் யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

இதனை பாஜக அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த கொண்டாடத்தின் ஒரு பகுதியாக பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை விவசாயிகளிடம் மேலும் விரிவாக கொண்டு சேர்க்க இன்று சிறப்பு பிரசாரத்தை மாநில அரசு தொடங்கியுள்ளது. இது குறித்து யோகி ஆதித்யநாத் கூறுகையில், "தேசிய அளவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதன்மையானதாக இருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் இம்மாநிலத்தில் ஒரேயொரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை.
அதேபோல பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. வழக்கமாக மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் நடைபெறும். ஆனால் முதன் முறையாக நாங்கள் இந்த மாநாட்டை லக்னோவில், உத்தரப் பிரதேசத்தில் நடத்தி காட்டியிருக்கிறோம். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் மாநிலத்திற்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பாக உட்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்டம் தோறும் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும் என்றும், இரு கல்லூரியாகவும் மருத்துவமனையாகவும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தை பொறுத்த அளவில் கரும்பு விவசாயிகள் அதிகம் இருக்கின்றனர்.
இவர்களின் பிரச்னை காலநிலை மாற்றம்தான். திடீரென பெய்யும் அதிக மழை மற்றும், பருவமழை பொய்து போதல் போன்றவை காரணமாக விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்கின்றனர். எனவு இவர்களுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சில விவசாயிகளுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இன்று சிறப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க முயன்றுள்ளோம்" என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications