பிரதமர் மோடியின் திட்டங்களால்.. 2047க்குள் இந்தியா சர்வதேச அளவில் மிளிரும்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த தேசமாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றுவார் என, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உ.பியின் சேவாபுரி தொகுதியின் பார்கி கிராம சபையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா (கிராமப்புற பகுதி) நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “புதிய இந்தியாவில் எந்தவித பாகுபாடுகளும் இருக்காது. மத்திய அரசு அனைவரையும் ஒன்றாகவே பாவிக்கும். அனைவருக்கும் அனைத்து சலுகைகளும் கிடைப்பதை உறுதி செய்யும். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை வளர்ந்த தேசமாக முன்னிறுத்த பிரதமர் மோடி தொடர்ந்து போராடி வருகிறார்.

இந்தியாவில் தற்போது உலக தரம் வாய்ந்த கட்டமைப்புகள் இருக்கின்றன. இது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. உத்தரப் பிரதேசத்தை பாருங்கள். பாஜக ஆட்சி பொறுப்புக்கு வராமல் இருந்தபோது இந்த மாநிலம் குண்டர்களின் மாநிலமாக இருந்தது. அவர்கள் வைத்ததுதான் சட்டமாக இருந்தது. அவர்கள் நிலங்களை கூட விட்டுவைக்கவில்லை. தொடர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்தனர். ஆனால், தற்போது நிலைமை அப்படியே தலைகீழாய் மாறியிருக்கிறது.
ஒரு காலத்தில் நாட்டின் வேறு எந்த பகுதியிலிருந்தும், மற்ற மாநிலங்களுக்கு புலம் பெயர் தொழிலாளர்களாக செல்வதை விட, உ.பியிலிருந்துதான் அதிகமான இளைஞர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த எண்ணிக்கை அப்படியே குறைந்திருக்கிறது. நாங்கள் உருவாக்கிய புதிய திட்டங்கள் உ.பி இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கொடுத்திருக்கிறது. இது அனைத்தும் பிரதமர் நரேந்திர மோடியின் வழிக்காட்டுதலின்படித்தான் நடந்தது” என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications