கிண்டலா பண்ணீங்க.. பார்த்துட்டே இருங்க "தலைகீழ் மாற்றத்தை".. யோகியின் சரவெடியால் அதிர்ந்துபோன உ.பி.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு செய்த சாதனைகளை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பட்டியலிட்டுள்ளார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாத்தியமில்லாததை கடந்த 6 ஆண்டுகளில் நாங்கள் சாத்தியமாக்கி காட்டியுள்ளோம் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்த ஆண்டு மாநிலத்தின் வளர்ச்சிக்காக கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில் இதனை கருத்தில் கொண்டு இந்த நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த குற்றச்சாட்டுகளுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதிலளித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று அவர் சட்டப்பேரவையில் பேசியதாவது, "கடைசியாக நாங்கள் 2018ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினோம். இதனையடுத்து கடந்த மாதம் மற்றொரு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். இம்மாநிலத்தில் எது சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டதோ அதை நாங்கள் கடந்த 6 ஆண்டுகளில் வியர்வை சிந்தி உழைத்து சாத்தியமாக்கியிருக்கிறோம். அதன் பலனாக இன்று எங்களிடம் சிறப்பான சேவைகள் இருக்கின்றன.
எக்ஸ்பிரஸ் சாலைகள், சர்வதேச விமான போக்குவரத்து நெட்வொர்க், சிறப்பான ரயில் நெட்வொர்க் ஆகியவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாங்கள் ஒவ்வொரு துறைக்கும் அது சார்பான கொள்கைகளை வகுத்து எங்களது பணிகளை முன்னெடுத்து சென்றோம். நிலங்களை அதிக அளவில் பதுக்கி வைத்திருக்கும் மாஃபியாக்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். 64 ஆயிரம் ஹெக்டேர் நிலம் இந்த மாஃபியாக்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.
சர்வதேச அளவில் 16 நாடுகளிலிருந்தும், தேசிய அளவில் 8 பெரிய நகரங்களில் இருந்தும் முதலீடுகளை உத்தரப் பிரதேசத்திற்கு கொண்டு வந்திருக்கிறோம். மிகவும் பின்தங்கிய பகுதிகளான பூர்வாஞ்சல் மற்றும் புந்தேல்கண்ட் பகுதிகளிலும் கூட பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகப்பெரிய வெற்றி. ஒரு காலத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு மும்பையிலும், டெல்லியிலும் நடைபெற்றது. ஏன் உத்தரப் பிரதேசத்தில் இம்மாநாடு நடைபெறவில்லை என்று கேட்கப்பட்டதற்கு இம்மாநிலத்திற்கு யார் வாருவார்கள்? என்று ஏளனமாக பேசப்பட்டது.
ஆனால், இந்த ஏளனத்தை உடைத்து நாங்கள் முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம். நாங்கள் முதன் முறையாக ஆட்சிக்கு வந்தபோது 2017ம் ஆண்டில் ரூ.3.40 லட்சம் கோடி வளர்ச்சி நிதியாக பட்ஜெட்டில் அறிவித்தோம். தற்போது 6 ஆண்டுகள் கடந்த இந்த நிதியானது ரூ.6.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது மாநிலத்தின் சிறந்த பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் மோடி, 'அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி' எனும் தாரக மந்திரத்தை வழங்கினார். இந்த மந்திரம்தான் எங்களது வெற்றிக்கு காரணம்.
2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி ஒரு குழுவை மட்டும் சார்ந்திருந்தது. ஆனால் இன்று, ஒவ்வொரு கிராமத்திலும் வளர்ச்சி பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேச இளைஞர்கள் இந்தியாவுக்கு எங்கு சென்றாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கிறது. விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை கடந்த காலத்தில் இருந்தது. தற்போது பாஜக ஆட்சியில் இது முற்றிலும் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications