வரலாற்று சிறப்புமிக்க ஆன்மீக தலங்களை பாஜக அரசுதான் பாதுகாக்கிறது! யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: குறிப்பிடத்தக்க கலாச்சார, வரலாற்று மற்றும் ஆன்மீக பாரம்பரிய தளங்களை பாதுகாத்து மீட்டெடுத்தது பாஜக அரசுதான் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆன்மீக தலங்களை மீட்டெடுத்தது பாஜக அரசுதான் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், குறிப்பிடத்தக்க கலாச்சார, வரலாற்று மற்றும் ஆன்மீக பாரம்பரிய தளங்களை பாதுகாத்து மீட்டெடுக்க பாஜக அரசு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக கான்பூர், மதுரா மற்றும் ஃபதேபூரில் உள்ள பல்வேறு குறிப்பிடத்தக்க தளங்களுக்கான விரிவான திட்டத்தை தயாரித்துள்ளது. அதன்படி கான்பூரில் உள்ள பிதூரில் அமைந்துள்ள மகரிஷி வால்மீகி ஆசிரமம், மதுராவின் ராஜா சீதாராம் மஹால் மற்றும் ஃபதேபூரில் உள்ள ஷிவ்ராஜ்பூரில் அமைந்துள்ள ராசிக் பிஹாரி கோயிலின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை விரைவில் மாநில அரசு விரைவில் தொடங்க இருக்கிறது.
பித்தூரில் உள்ள மகரிஷி வால்மீகியின் ஆசிரமத்தைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் நாங்கள் ரூ.1.52 கோடியை ஒதுக்க திட்டமிட்டிருக்கிறோம். அதேபோல மதுராவின் ராஜா சீதாராம் மஹாலைப் புதுப்பிக்கவும், பாதுகாக்கவும் ரூ.1.29 கோடி செலவாகும். மேலும் ஃபதேபூரில் உள்ள சிவராஜ்பூரில் உள்ள ராசிக் பிஹாரி கோயிலின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்காக யோகி அரசாங்கத்தால் ரூ.1.97 கோடி செலவிடப்படும்" என்று கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications