சமாஜ்வாடியை விட அதிக வளர்ச்சியை கொடுத்தது பாஜகதான்! முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: சமாஜ்வாடி ஆட்சியை விட பாஜக ஆட்சியில் உத்தரப் பிரதேசம் சிறப்பான வளர்ச்சியை கொடுத்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
சமீபத்தில் நிதி ஆயோக் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2022ஐ வெளியிட்டிருந்தது. இந்த குறியீட்டின்படி, ஏற்றுமதியில் உத்தரப் பிரதேசம் 7வது இடத்தில் இருக்கிறது. இது குறித்து கூறிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கடந்த காலங்களை விட பாஜக ஆட்சியில் தற்போது உத்தரப் பிரதேசம் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். மேலும், மாநிலத்தில் உள்ள கிராமங்களை மேம்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

"இந்த திட்டம் இரண்டு நோக்கங்களுக்கு உதவுகிறது. முதல் நோக்கம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள், அவர்களின் சொந்த மண்ணுடன் தொடர்பு படுத்திக்கொள்ள இது ஓர் வாய்ப்பு. இரண்டாவது, இந்த திட்டம் மூலம் அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும். தாயும், தாய் நாடும் சொர்க்கத்தைவிட உயர்ந்தது. எனவே மாத்ருபூமி யோஜனா திட்டத்திற்கு அனைவரும் பங்காற்ற வேண்டும்.
முதலில் இந்த திட்டம் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனங்கள்தான் கிராமங்களின் வளர்ச்சிக்கு பங்காற்ற முடியும் என்று சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் இதில் சில விதிகள் திருத்தப்பட்டு, தனி நபர்கள் கூட இதற்கு பங்காற்றலாம் என்று மாற்றப்பட்டது. இதில் மேலும் சில மாற்றங்கள் கூட செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications