உத்தரப் பிரதேச விவசாயிகளின் வாழ்வில் புதிய விடியல்! யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த மாஸ் திட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் வேளாண் மூலம் வரும் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டங்கள் மூலம் இளைஞர்களும் அதிக அளவில் வேளாண் பக்கம் திரும்புவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று வேளாண் தொடர்பாக புதிய திட்டங்களை தொடங்கி வைத்திருக்கிறார். இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் உரையாற்றிய அவர், "வேளாண் மிக முக்கியமான தொழிலாகும். இதுதான் நம்முடைய முதுகெலும்பாக இருக்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்துவதற்கும், தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் விவசாயத்தை மறு சீரமைப்பு செய்வது அவசியமாக இருக்கிறது. அந்த வகையில், கிழக்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் பயன்பெறும் வகையில் தற்போது புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நம்முடைய மாநிலம் ஏற்கெனவே பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி விவசாயப் பாசனத் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்களை நாம் சிறப்பாக செயல்படுத்திய அனுபவத்தை கொண்டிருக்கிறோம். தற்போது பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் 2.62 கோடி விவசாயிகள் ஆண்டுக்கு தலா ரூ.6,000 உதவி பெறுகிறார்கள். இது விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைப்பது மட்டுமல்லாமல் உணவு பதப்படுத்தும் துறையில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த திட்டங்களுடன் சேர்ந்து மாநில அரசின் திட்டங்கள் உ.பி விவசாயிகளின் வாழ்வில் புதிய விடியலை ஏற்படுத்தும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications