சாமானிய மக்களின் திருமணங்களும் இனி விமர்சையாக நடைபெறும்! உ.பியில் புதிய திட்டம்.. யோகி அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: திருமணத்திற்காக சாமானிய மக்கள் இனி லட்சக்கணக்கில் செலவழிக்க தேவையில்லை எனவும், அரசு சார்பில் கிராமங்கள் தோறும் கட்டப்படும் மண்டபங்களில் விமர்சையாக அவர்கள் திருமணங்களை நடத்திக்கொள்ளலாம் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

பஞ்சாயத்து ராஜ் துறையின் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத், கிரமங்கள் தோறும் திருமண மண்டபங்கள் கட்டும் திட்டத்தை விரைவில் செயல்படுத்தி முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "மாநிலத்தின் செழிப்புக்கு கிராமங்களை மேம்படுத்துவது அவசியம். இந்த திசையில், உத்தரப் பிரதேசத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட முயற்சிகள் நல்ல பலனைத் தந்துள்ளன.

Yogi Adityanath ordered that the project to build marriage halls in every village should be completed quickly

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மாநிலத்தில் 57,702 கிராம பஞ்சாயத்துகள், 75 ஜிலா பஞ்சாயத்துகள் மற்றும் 826 ஷேத்ரா பஞ்சாயத்துகள் மூலம் மூன்றடுக்கு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சிறப்பாக செயல்படுகிறது. பல பஞ்சாயத்துகள் புதுமையைப் பின்பற்றி மற்ற பஞ்சாயத்துகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டு வருகின்றன. கிராமங்கள் சொந்த கால்களில் நிற்கும் அளவுக்கு சுயச்சார்பை ஊக்குவிக்க வேண்டும். கிராமங்களுக்கு திறமை இருக்கிறது கொஞ்சம் வழிக்காட்டுதல்கள் இருந்தால் எல்லாம் அப்படியே தலைகீழாக மாறிவிடும்.

இந்த மாற்றத்திற்கான விஷயத்தில் உறுதியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்க அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறைகளை கட்டிகொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது. அதாவது ஊராட்சிகளில் வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது என்று கூறியுள்ளது. ஆனால் போதுமான நிதி எங்களிடத்தில் இருக்கிறது.

அதுபோல கிராமத்தில் வாழும் மக்கள் திருமணங்களுக்காக லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். இதை மாற்றும் விதமாக கிராமங்கள் தோறும் திருமண மண்டபங்கள் கட்டும் பணியை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். இதன் மூலம் குறைந்த செலவில் அவர்களின் திருமண கனவு நிறைவேறும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+