அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பான பணி சூழல்! புதிய முயற்சியை முன்னெடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசு
லக்னோ: அரசு ஊழியர்களுக்கு சிறந்த பாதுகாப்பான மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருவதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இந்நிலையில் அரசு ஊழியர்களின் பணி சூழலை எளிமையாக்கவும், அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்னைகளை சரி செய்யவும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, "அரசு ஊழியர்களுக்கான பாதுகாப்பான பணி சூழலை உருவாக்க உத்தரப் பிரதேச அரசு திட்டமிட்டிருக்கிறது. அதன்படி ஊழியர்களின் பிரச்னைகளை ஆராயவும், அதற்கு தீர்வு காணவும் மாதாந்திர கூட்டங்களை நடத்த அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக ஏற்கெனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த உத்தரவை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என் தற்போது அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், கோட்ட ஆணையர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறார்.
அரசு ஊழியர்கள்தான் அரசு எந்திரத்தின் அச்சாணி. அவர்கள் இல்லையெனில் எந்திரம் செயல்படாது. எனவே அவர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதைதான் நாங்கள் இப்போது செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications