பெண்களின் பாதுகாப்பு+முன்னேற்றத்திற்கு புதிய திட்டங்கள்! உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக உத்தரப் பிரதேச அரசு தொடங்கியுள்ள திட்டங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதனை அம்மாநில அரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் பதவி வகிக்கவில்லை. அந்த வகையில் 2017ம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத் புதிய சாதனையை படைத்திருக்கிறார். எனவே இதனை கொண்டாடும் விதமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.

இதில் கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் முக்கியமானதாகும். இந்த திட்டத்தின்படி ஏழை பெண் குழந்தைகள் பிறந்தது முதல் கல்வியை முடிக்கும் வரை அனைத்து செலவுகளையும் மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். இந்த திட்டம் குறித்து கூறிய யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசம் தற்போது வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. 2017க்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் கலவரங்களும், வன்முறைகளும் அதிகமாக இருந்தன. ஆனால் பாஜக பொறுப்பேற்றத்திலிருந்து சட்டம் ஒழுங்கு முறையாக கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக குற்றங்கள், வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன.
குறிப்பாக பெண்கள் மீதான குற்றங்கள் குறைக்கப்பட்டிருக்கிறது. பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தை நோக்கி திரும்பியிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 முக்கிய துறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான திட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.35 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
ஏற்கனவே மத்திய அரசு சார்பில் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டமும் மாநிலம் முழுவதும் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. இதற்கு பக்க பலமாக கன்யா சுமங்கலா யோஜனா திட்டம் பங்காற்றுகிறது. மறுபுறம் மருத்துவ கல்லூரியை அதிகரிக்கவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவக் கல்லூரிகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகளை பொறுத்த அளவில் மாணவர்களை விட மாணவிகளுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட்












Click it and Unblock the Notifications