அழகான நகரமாக மாறிய அயோத்தி.. பிரதமர் மோடியின் கனவு நிஜமானது! நெகிழ்ந்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: கடவுள் அயோத்திக்கு வருவதற்கு முன்னர், அயோத்தியை அழகான நகரமாக உருவாக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்பினார். அதை உத்தரப் பிரதேச அரசு சாத்தியமாக்கியிருக்கிறது என்று யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக பேசிய யோகி ஆதித்யநாத், "500 ஆண்டுக்கால காத்திருப்பு முடிவுக்கு வரப்போகிறது. இறைவன் வருவதற்கு முன், அயோத்தியை மிக அழகான நகரமாக உருவாக்க வேண்டும் என்று பிரதமர் திட்டமிட்டிருந்தார். இந்த திட்டத்தை உ.பி அரசு சாத்தியமாக்கியிருக்கிறது. பிரதமருக்கு மக்கள் இன்று பிரமாண்டமான வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.

அயோத்தி 4 வழிச்சாலை, 6 வழிச்சாலை மற்றும் 8 வழிச்சாலை இணைப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், புதிய ரயில் நிலையம், வந்தே பாரத் ரயில்கள் மற்றும் 2 அம்ரித் பாரத் ரயில்களும் அயோத்திக்கு பெருமை சேர்த்திருக்கின்றன. அயோத்தி விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகி பெயர் சூட்டியிருப்பது நாட்டின் பாரம்பரியத்தை பெருமைப்படுத்தும் விதமாக இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் 15,700 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் பிரதமர் மோடியின் எண்ணமாக இருக்கிறது. அதன் விளைவுதான் இத்தனை நலத்திட்டங்களை உத்தரப் பிரதேசம் பெற்றிருக்கிறது. மாநிலத்தின் உள்கட்டமைப்பு எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதற்கு அயோத்திதான் மிகப்பெரிய உதாரணம். அயோத்தியின் செழுமையான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், நவீன, உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையுடன், 15,700 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மாநிலத்திற்கு அர்ப்பணித்துள்ளார்" என்று கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications