மாமியாரை கர்ப்பமாக்கி.. குழந்தையும் பெற்று.. ஏம்பா மருமகனே.. இதெல்லாம் நல்லாவா இருக்கு.. உபி களேபரம்

மாமியாரை கர்ப்பம் ஆக்கி குழந்தையும் பெற்றிருக்கிறார் மருமகன்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் ஒரு மாமியார் - மருமகன் அக்கப்போர் நடந்துள்ளது. இருவரும் இணைந்து நெருங்கி பழகி குழந்தையும் பெற்றுள்ளனர். அந்தக் குழந்தையை தனது மகனாக தத்தெடுத்துக் கொண்டார் மருமகன்.. இதுதான் ஹைலைட்டே!

கள்ளக்காதல்களில் இது ஒரு தினுசாகத்தான் இருக்கிறது. எந்த ஊரில் இந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் இந்த செய்திதான் உ.பியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

young man illegal affair with his mother in law and got child from her

அதாவது அந்த கணவன் மனைவிக்கு கடந்த ஐந்து வருடமாக குழந்தை பாக்கியமே இல்லை. ஒரு குழந்தை பிறக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தனர். மனைவி போகாத கோவில் இல்லை. வேண்டாத சாமி இல்லை. இந்த நிலையில் கணவர் திடீரென ஒரு குழந்தையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். என்னங்க இது என்று மனைவி அதிர்ச்சியாகி கேட்டபோது, ஷாக் ஆகாதே.. இந்தக் குழந்தையை நான் தத்தெடுத்துவிட்டேன்.. எத்தனை காலம்தான் குழந்தை இல்லாமல் நீ தவிப்பே என்று கூறியுள்ளார்.

மனைவிக்கோ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.. குழந்தையை வாங்கி கொஞ்சி மகிழ்ந்தார். அவருக்குள் தாய்மை தவிப்புடன் வெளிப்பட்டது. ஆனால் மேட்டரே வேறயாம்.. அந்த மேட்டரை போட்டு உடைத்து விட்டார் கணவரின் நண்பர் ஒருவர்.

அதாவது அந்தக் குழந்தைக்கு அப்பா சாட்சாத் இந்த கணவரேதான்.. ஆனால் அம்மா யாரு தெரியுா.. அவரோட மாமியார்தான்!.. அதாவது மாமியாருக்கும், மருமகனுக்கும் இடையே எப்படியோ கனெக்ஷன் ஆகி விட்டது. யாருக்கும் தெரியாமல் நெருங்கிப் பழகியுள்ளனர். பழக்கம் அதிகமாக மாமியார் வயிற்றில் கரு வந்து விட்டது.

என்னடா இது என்று தவித்துப் போனார்கள் இருவரும். ஆனால் மருமகனுக்கு அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்க ஆசை.. அதை மனைவியிடம் கொடுத்து அவரது குழந்தை ஆசையைத் தீர்க்க இது நல்ல வாய்ப்பு என்று கருதினார். மாமியாரும் ஒத்துக் கொண்டார். இதையடுத்து மாமியாரை யாருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தங்க வைத்தார். பிரசவமும் நல்லபடியாக நடந்தது. அழகான குழந்தையும் பிறந்தது.

அந்தக் குழந்தையைக் கொண்டு வந்துதான் மனைவி கையில் கொடுத்து தத்தெடுத்துட்டேன் என்று கணவர் கூறியுள்ளார். இந்த சம்பவம்தான் இப்போது உபியில் பரபரப்பாக பேசப்படுகிறதாம். அந்த மனைவி இப்போது என்ன முடிவெடுத்தார் என்பது தெரியவில்லை. மாமியாரின் நிலை தெரியவில்லை.. ஆனால் கணவர் நிலைமைதான் ரொம்ப குழப்பமாக இருக்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+