Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிப்பு தான் எல்லாம்.. சைக்கிள் கடையில் பஞ்சர் ஒட்டிய இளைஞர் இன்று சிவில் கோர்ட் நீதிபதி! சாதனை கதை!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் தனது அப்பாவுக்கு உதவியாக பஞ்சர் ஒட்டும் வேலை செய்து வந்த இளைஞர், சிவில் கோர்ட்டில் நீதிபதி ஆகியுள்ளார். குடிசையில் வாழ்ந்தாலும், வானத்தை நோக்கிக் கனவு கண்டு சாதித்துள்ளார் அந்த இளைஞர்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராய் ஹராக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாஜாத் அகமது. இவர் அப்பகுதியில் சைக்கிள் டியூபுக்கு பஞ்சர் ஒட்டும் கடை நடத்தி வருகிறார். இதோடு இணைந்த பெட்டிக்கடையையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி அப்சானா பேகம் வீட்டிலேயே தையல் மெஷின் வைத்து, அப்பகுதி பெண்களுக்கு துணி தைத்துக் கொடுத்து வருகிறார்.

Youth who patched puncture for cycles became a judge in Uttar Pradesh

இவர்களது 3 மகன்களில் இரண்டாவதாகப் பிறந்தவர் அஹத் அகமது. அஹத் அகமது கடந்த 2019ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர் அலகாபாத் ஐகோர்ட்டில் உள்ள ஒரு வக்கீலிடம் ஜூனியராக சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்கினார்.

சட்டம் படித்த அஹத் அகமது நீதிபதி ஆக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், நீதிபதி தேர்வுக்கு பயிற்சி பெற பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்தால் அதிக பணம் செலவாகும் என்பதால் தங்களது குடும்ப பொருளாதார சூழல் காரணமாக தாமதித்து வந்தார்.

Youth who patched puncture for cycles became a judge in Uttar Pradesh

இந்நிலையில் இலவச ஆன்லைன் பயிற்சியாளரின் உதவி அவருக்கு கிடைத்தது. அவர் மூலமாக ஆன்லைனில் இலவசமாக பயிற்சி பெற்றார். பயிற்சியை முடித்ததும் அஹத் அகமது நீதிபதி பதவிக்கான தேர்வை எழுதினார். 303 பதவிகளுக்காக நடந்த தேர்வில் அஹத் அகமது 157-வது இடத்தை பிடித்தார். இதையடுத்து அவர் சிவில் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவ்வப்போது, தனது தந்தை ஷாஜாத் அகமதுவுக்கு உதவியாக அவரது கடையில் பஞ்சர் ஒட்டும் வேலையும் செய்து வந்துள்ளார் அஹத் அகமது. படித்துக்கொண்டே பஞ்சர் ஒட்டிய அஹத் அகமது, தற்போது மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டுள்ளது அப்பகுதியினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youth who patched puncture for cycles became a judge in Uttar Pradesh

அஹத் அகமதுவின் அண்டை வீட்டார், அவரையும் அவரது குடும்பத்தினரையும் வாழ்த்தி அவரது வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். அஹத்தின் வெற்றி அப்பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகமாக மாறியுள்ளது. குடும்ப நிலைக்கு இடையே பெரிய கனவு கண்டு அதனை நிறைவேற்றியுள்ள அஹத் அகமதுவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக பேசியுள்ள அஹத் அகமது, "எங்கள் வீடு மிகச் சிறிய வீடு. குடிசையில் வசிக்கும் எங்களை பள்ளி, கல்லூரிக்கு அனுப்ப பெற்றோர் போராடினர். ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் ஆற்றல் கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியின் மீதுள்ள நம்பிக்கையால் இன்று பலன் அடைந்துள்ளோம்" என நம்பிக்கையுடன் கூறுகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+