அட கொடுமையே.. இன்ஸ்டாகிராமில் பழக்கம்! காதலனுக்காக மதுரை சிறுமி செய்த காரியம் - பெற்றோர் அதிர்ச்சி
மதுரை: பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக 16 வயது சிறுமியிடம் பழகி 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவனியாபுரம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகாரளித்து இருக்கிறார்கள்.
இன்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் வயது வித்தியாசமின்றி அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் முகம் தெரியாத பலரது அறிமுகமும் கிடைத்து பல திருமணங்களும் நடைபெறுகின்றன.
அதற்கு இணையாக மோசடிகளும் அரங்கேறுகின்றன. மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலணி பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம். இவரது மனைவி மீனாட்சி. இந்த தம்பதியினரின் 16 வயது மகள் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம்
இவர் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சதீஷ்குமார் என்பவருடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து பழகி வந்து இருக்கின்றனர். இந்த நிலையில் சதீஷ்குமார் 16 வயது சிறுமியிடம் பேசி அவரது வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வருமாறு கூறி இருக்கிறார்.

பெற்றோர் அதிர்ச்சி
சிறுமியும் சதீஷ்குமார் சொல்வதை கேட்டு வீட்டு பீரோவில் இருந்த நகைகளை கொடுத்துள்ளார். சிறுமி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து எடுத்து வந்த தங்க நகைகளை வாங்கிய சதீஷ்குமார் சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார். இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் பீரோவை திறந்து பார்த்தபோது உள்ளே வைக்கப்பட்டு இருந்த நகைகள் மாயமானது தெரியவந்தது.

காவல்நிலையத்தில் புகார்
இது குறித்து மகளிடம் பெற்றோர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சதீஷ்குமார் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகியதாகவும் அவர் கேட்டதால் நகைகளை எடுத்துச் சென்று கொடுத்ததாகவும் ஒப்புக் கொண்டார். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்,

60 சவரன் நகை
சதீஷ்குமார் என்பவர் எனது மகளுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி ரூ.18 லட்சம் மதிப்பிலான 60 சவரன் நகையை மிரட்டி வாங்கியதாக அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல்












Click it and Unblock the Notifications