யாருடனும் பேசவில்லை.. திடீரென கதவை அடைத்து கொண்டு.. அங்கயற்கண்ணி செய்த காரியம்.. பதறிபோன மதுரை
மதுரையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை: யாருடனும் பேசவில்லை.. சாப்பிடவுமில்லை.. பித்து பிடித்ததுபோல சுவற்றையே வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி.. தீ விபத்தில் இறந்துபோன கணவனை மறக்க முடியாமல் அழுது அழுது ஓய்ந்த நிலையில், கடைசியில் விபரீத முடிவை எடுத்து விட்டார்...!
கடந்த தீபாவளி அன்று விடிகாலை, மதுரை விளக்குத்தூண் அருகிலுள்ள ஒரு ஜவுளிக்கடையில் திடீரென தீப்பிடித்து கொண்டது.. அதனால், தீயணைப்புத் துறையினர் விரைவாக வந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்கள்.
அப்போது அந்த கட்டிடமே இடிந்து விழுந்துவிட்டது.. அந்த இடிபாட்டில் 4 வீரர்கள் சிக்கி கொண்டனர்.. அதில் சிவராஜா, கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேர் உயிரிழந்துவிட்டனர்.. இந்த சம்பவத்தினால் மதுரையே அன்று கலங்கிவிட்டது.

சிவராஜ்
உயிரிழந்த கிருஷ்ணமூர்த்திக்கு கல்யாணமாகவில்லை.. செக்கானூரணியை சேர்ந்த சிவராஜாவுக்கு கல்யாணமாகி 8 வருஷமாகிறது.. இவரது மனைவிதான் அங்கயற்கண்ணி.. 29 வயதாகிறது.. 6 மற்றும் 2 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர். சிவராஜாவின் திடீர் மறைவால் அந்த குடும்பமே நிலைகுலைந்துவிட்டது.

நிவாரணம்
ரூ.25 லட்சமும், தீயணைப்புத்துறையினர் சார்பில் ரூ.50 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.. கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், அங்கயற்கண்ணியை எப்படி, யாரால் சமாதானப்படுத்துவது என்றுதான் தெரியவில்லை. கணவர் இறந்தபிறகு மாமனார் வீட்டில்தான் குழந்தைகளுடன் இருந்தார்.. ஆனால் யாருடனும் பேசவே இல்லை.. ஒருவேளை அம்மா வீட்டுக்கு சென்றால் அங்கேயாவது இயல்பு நிலைக்கு வருவார் என்று நினைத்து, புதுக்கோட்டையிலுள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

கண்ணீர்
அங்கும் அப்படியேதான் இருந்தார்... சாப்பிடவும் இல்லை.. அழுது கொண்டே இருந்தவருக்கு என்ன சொல்லி ஆறுதல்படுத்துவது என்றும் குடும்பத்தினருக்கு தெரியவில்லை.. சம்பவத்தன்று, மூத்த மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போகவும், அவனை வீட்டில் இருந்தோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.. அந்த நேரம் பார்த்து அங்கயற்கண்ணி, தன் ரூமுக்குள் சென்று கதவை சாத்தி கொண்டு வெளியே வரவே இல்லை. கதவை தட்டியும் திறக்கவே இல்லை.

டாக்டர்கள்
பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து கொண்டு போனால், தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார்.. ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றும் பிரயோஜனமில்லை... எப்போதோ உயிர் போய்விட்டது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். நாகமலை போலீசார் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. என்றாலும் அம்மா, அப்பா இல்லாமல் அந்த குழந்தைகள் 2 பேரும் அழுது கொண்டே இருக்கிறார்கள்!
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications