இந்திய கொடியுடன் பறந்த இஸ்ரேல் கொடி.. ஜெய் ஸ்ரீராம் முழக்கம்.. பாஜகவினரை தட்டி தூக்கிய மதுரை போலீஸ்
மதுரை: இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மதுரை ஏவி மேம்பாலத்தில் இந்திய கொடியுடன் சேர்த்து இஸ்ரேல் கொடியை பறக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொடிகளை பறக்கவிட்டதோடு ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜே என்று முழக்கமிட்ட பாஜகவினர் உட்பட நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் 21வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு காரணம் கடந்த 7ம் தேதி ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல்தான். ஹமாஸ், தங்கள் நாட்டின் விடுதலைக்காக அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதலை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும்.

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணைகளை கொண்டு பயங்கரவாத தாக்குதலை நடத்தியது. இதில் சுமார் 1400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் பணயக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவ்வளவுதான் மத்திய தரைக்கடல் பகுதியில் போர் தீ பரவிக்கொண்டது. 7ம் தேதி தொடங்கி இன்று வரை இஸ்ரேல் பழிவாங்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.
எந்த அளவுக்கு தீவிரம் எனில், ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா ஓராண்டுக்கு வீசிய குண்டுகளை, இஸ்ரேல், காசா மீது ஒரே வாரத்தில் வீசிவிட்டது. இந்த அளவு தீவிரமான தாக்குதல் காரணமாக இதுவரை 2,913 குழந்தைகள் உட்பட 7,028 பேர் உயிரிழந்துள்ளனர். 18,484 பேர் படுகாயமடைந்துள்ளனர். மறுபுறம் காசா மக்களுக்கு குடிநீர், கேஸ், பெட்ரோல், டீசல், மின்சாரம், உணவு பொருள், மருந்து பொருட்கள் போன்ற அனைத்து இணைப்புகளையும் இஸ்ரேல் துண்டித்திருக்கிறது.
இப்படி இருக்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவாகரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நேரு காலத்தில் தொடங்கி, வாஜ்பாய், மன்மோகன் சிங் காலம் வரை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகதான் இருந்தது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுடன் நிற்பதாக கூறியிருந்தார். இந்த கருத்து இந்தியாவின் வரலாற்று நிலைப்பாட்டை மாற்றுவதை போல இருப்பதாக எதிர்க்கட்சிகளால் விமர்சனத்திற்கு உள்ளானது.
இப்படி இருக்கையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலின் நட்பு நாடுகளான அமெரிக்கா, பிரட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு நேரு காலத்தில் தொடங்கி, வாஜ்பாய், மன்மோகன் சிங் காலம் வரை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகதான் இருந்தது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுடன் நிற்பதாக கூறியிருந்தார். இந்த கருத்து இந்தியாவின் வரலாற்று நிலைப்பாட்டை மாற்றுவதை போல இருப்பதாக எதிர்க்கட்சிகளால் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் கடந்த 24ம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதவாக கோவை உக்கடம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது. அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத்துகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்ற இந்த போராட்டத்தில், புதியதாக கட்டப்பட்டு வந்த மேம்பாலத்தில் பாலஸ்தீன கொடியை சிலர் பறக்கவிட்டனர்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்ததையடுத்து, கொடியை பறக்கவிட்டவர்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இதனையடுத்து ஜமாத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பை சேர்ந்த ஒருவர், மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்த இருவர் என மொத்தம் மூன்று பேரை நேற்று கைது செய்திருக்கிறது. இந்த சம்பவத்தின் சலசலப்புகள் ஓய்வதற்குள் இஸ்ரேல் கொடியை பறக்கவிட்டவர்களை கைது செய்திருக்கிறது தமிழக காவல்துறை.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஏவி மேம்பாலத்தில் நேற்று மாலை 4 இளைஞர்கள் இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடிகளுடன் இருநாட்டின் கைகளும் இணைந்ததை போன்ற INDIA STAND WITH ISRAEL என்கிற வாசகம் அச்சடிக்கப்பட்ட பேனரை பறக்கவிட்டனர். அப்போது பாரத் மாதா கி ஜே ,ஜெய்ஸ்ரீராம் , இந்தியா இந்து நாடு என முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 4 இளைஞர்களையும் கைது செய்து மதிச்சியம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த சரத்குமார், கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த ரகுபதி என்ற நேதாஜி, புதூரை சேர்ந்த பிரவீன்ராஜ், திடீர்நகர் பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பது தெரிய வந்தது. மட்டுமல்லாது இவர்கள் 4 பேரும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications