அடடே.. உண்டியலில் சேமித்த ரூ.1,000-ஐ மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வழங்கிய 4 வயது குட்டி பாப்பா!
மதுரை: தேர்தல் பிரசார பணிகளுக்கு பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும், 4 வயது சிறுமியும் பொன்னுத்தாய்க்கு நிதியுதவி அளித்ததுதான் தற்போது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.
4 வயது சிறுமியான தன்யாஸ்ரீ, தனது தாத்தா அன்றாடம் கொடுக்கும் பணத்தை உண்டியல் சேமித்த வகையில் கிடைத்த ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியாக அளித்தார்.

தீவிர வாக்கு வேட்டை
தமிழக தேர்தல் களத்தில் மக்களின் வாக்குகளை இழுக்க வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சில வித்தியாசமான முயற்சிகளையும், யுக்திகளையும் கையாண்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அப்படியும் வசியப்படுத்த முடியவில்லை என்றால் சில வேட்பாளர்கள் பணம் கொடுத்தும் மக்களை விலைக்கு வாங்கி வருவதாகவும் கூறப்டுகிறது.

வித்தியசமான மார்க்சிஸ்ட் வேட்பாளர்
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலைமை இப்படி இருக்க தமிழக தேர்தல் களத்தில் வித்தியாசமான வேட்பாளராக வலம் வருகிறார் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய். தேர்தல் பிரசார பணிகளுக்கு கூட பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார் பொன்னுத்தாய்.

பொதுமக்கள் நிதியுதவி
பொதுமக்களும் தாமாக முன்வந்து மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு நிதியுதவி செய்து வருகின்றனர். திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் அவருக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இப்படி பெரியவர்கள் நிதியுதவி அளிக்க, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியும், 4 வயது சிறுமியும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாய்க்கு நிதியுதவி அளித்ததுதான் தற்போது அனைவரின் புருவத்தையும் உயர்த்தியுள்ளது.

4 வயது சிறுமி நிதியுதவி செய்தார்
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர் சுப்பையா என்பவரின் பேத்தியான பத்தாம் வகுப்பு மாணவி சுகன்யா தான் சேமித்து வைத்திருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை தேர்தல் நன்கொடையாக அளித்தார்.இதேபோல் அவனியாபுரத்தில் பெட்டிக்கடை நடத்தும் திமுகவ உறுப்பினர் முருகன் என்பவரின் பேத்தி 4 வயது சிறுமியான தன்யாஸ்ரீ, தனது தாத்தா அன்றாடம் கொடுக்கும் பணத்தை உண்டியல் சேமித்த வகையில் கிடைத்த ஆயிரம் ரூபாயை தேர்தல் நிதியாக அளித்தார். சிறுமி தன்யாஸ்ரீரியை பொன்னுத்தாய் உச்சி முகர்ந்து பாராட்டியது அங்கு இருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
-
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications