75 பேர் லிஸ்ட் சிக்கிருச்சு.. அங்கித் திவாரி லேப்டாப்பில் ‘ஷாக்’.. ED அதிகாரிகள் மாட்ட போறாங்களாம்!
மதுரை: அங்கித் திவாரியின் லேப்டாப்பில் இருந்து, தமிழ்நாட்டில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 நபர்களின் பெயர் பட்டியல் சிக்கி உள்ளது என்றும், அங்கித் திவாரியின் வாக்குமூலத்தின் மூலம் மேலும் சில அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக பல கட்டங்களாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்து, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், சுரேஷ் பாபுவிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத் துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

அங்கித் திவாரி கைது: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அங்கித் திவாரியின் அறை சாவியை அமலாக்கத் துறையினர் தர மறுத்ததால் பூட்டை உடைத்து சோதனை நடத்தப்பட்டது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளையால் தள்ளுபடி செய்யப்பட்டது. தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரி அங்கித் திவாரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
நிறைய அதிகாரிகளுக்கு தொடர்பு: தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டார். அப்போது, “அங்கித் திவாரி உரிய ஆதாரங்களோடு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பல அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளது. அங்கித் திவாரியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினால் மட்டுமே லஞ்சம் பெற்ற விவகாரத்தில் மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “அங்கித் திவாரியின் லேப்டாப்பில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கி உள்ளது. அதில், தமிழகத்தில் லஞ்ச வழக்குகளில் சிக்கி உள்ள 75 பேரை பெயருடன் பட்டியலிட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டியுள்ளது. வழக்குகள் நிலுவையில் உள்ள பலரை மிரட்டி பணம் பெற்றுள்ளதாக அங்கித் திவாரியே தெரிவித்துள்ளார். அங்கித் திவாரி திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபு மீது வழக்கே இல்லை என குறிப்பிட்டு ஜாமீன் கோருகிறார். ஆனால் சுரேஷ் பாபு மற்றும் அவரது மனைவி மீது மதுரை மண்டல அலுவலகத்தில் வழக்கு உள்ளது.
தமிழக அரசு வாதம்: அங்கித் திவாரியிடம் இருந்து 20 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ஏற்கனவே லஞ்சமாக பெற்ற 20 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட வேண்டி உள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காரில் அங்கித் திவாரி பணம் பெறும்போது அவருடைய குரல் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை உண்மையா என்பதை கண்டறிய அவருடைய குரலை பதிவு செய்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் இந்த வழக்கின் விசாரணை பாதிக்கப்படும். அவரைப் பாதுகாக்க அமலாக்கத் துறை அதிகாரிகள் முயல்கின்றனர். அங்கித் திவாரி கைது செய்யப்படும் வரை அவர் மீது அமலாக்கத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். மேலும் இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்ய முழு அதிகாரம் உள்ளது, விசாரணையை தொடரலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே ஜாமீன் வழங்கக் கூடாது, மனுவை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அங்கித் திவாரி மீது ஏற்கனவே எந்த வழக்கும் இல்லை. அவர் மீது வழக்கு புனையப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டு அடிப்படையில் திட்டமிட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மத்திய அரசு அதிகாரி என்பதால் வழக்கின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பு நாளை வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications