மதுரையில் ரயில்ல டீ போட்டார்களா? 2 சமையல் சிலிண்டர் யாருடையது? தப்பகூட முடியாமல் கருகிய முதியவர்கள்
மதுரை: 9 பேரின் உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன.. மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த தீ விபத்துக்கு என்ன காரணம்?
உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பாரத் கௌரவ் என்ற ஆன்மீக சுற்றுலா ரயிலில், இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது... மதுரை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கிட்டத்தட்ட 1 கி.மீ., தூரத்தில் இந்த ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கண்விழிப்பு: அப்போதுதான், திடீரென ரயில் தீப்பிடிக்க துவங்கி உள்ளது.. விடிகாலை நேரம் என்பதால் ரயிலில் பெரும்பாலானோர் தூங்கி கொண்டிருந்தனர். அதற்கு பிறகு கண்விழித்தபோது, புகை மண்டலமாக இருந்திருக்கிறது. முதலில், ஒரு பெட்டியில் பிடித்த தீ அடுத்தடுத்த பெட்டிகளில் பற்றிக்கொண்டதாக தெரிகிறது. சுமார் 90-க்கும் மேற்பட்டோர் அந்த ரயிலில் இருந்திருக்கிறார்கள்.
தீ விபத்து ஏற்பட்ட ரெயில் பெட்டி, சுற்றுலா ரெயிலின் ஒரு பெட்டியாகும். தீ விபத்து ஏற்பட்டது திருப்பதி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி என முக்கிய சுற்றுலா இடங்களுக்கு செல்லும் ரெயிலின் சிறப்பு முன்பதிவு செய்யப்பட்ட கடைசி பெட்டியாகும். இந்த பெட்டியில் மட்டுமே சுமார் 9 பேர் இருந்ததாக சொல்கிறார்கள்..
தீ விபத்து: ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதுமே பயணிகள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்துக்கொண்டு, ரயில் பெட்டிகளில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள்.. 80-க்கும் மேற்பட்டோர் பெட்டியில் இருந்த குதித்து தப்பித்துள்ளனர். அப்படியிருந்தும்கூட, சில பயணிகள் அந்த தீ விபத்தில் சிக்கிவிட்டனர்.. இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக சொல்கிறார்கள்.. பலி எண்ணிக்கை உயரும் என்றும் தெரிகிறது.
அதேபோல உயிரிழந்தவர்கள் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பயணிகள் என்பதும் தெரியவந்துள்ளது. அருகில் உள்ள பெட்டியில் உள்ளவர்களும், இந்த பெட்டியில் வந்து தூங்கினார்களா? என்பது தெரியவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
மதுரை போடி லைன் பகுதியில் ரயில்வே பெட்டியில் தீ விபத்து தீயணைப்புத் துறை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. ஆனாலும், தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை.. அதனால், தீ பற்றிக்கொண்ட ரயில் பெட்டிகளை தவிர மற்ற பெட்டிகள் தனித்துவிடப்பட்டிருக்கின்றன.. அதேபோல, இந்த தீ விபத்து, மற்ற ரயில்களிலும் பற்றிவிடாமல் இருக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் எடுத்து வருகிறது.
சுற்றுப்பயணம்: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பார்ட்டி கோச் என்ற ரயில்வே திட்டத்தின் அடிப்படையில், ஒரு பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து ஆன்மீக சுற்றுலாவை ஆரம்பித்துள்ளார்கள்.. கடந்த 17ம் தேதி இவர்களின் பயணம் தொடங்கியுள்ளது. அதன்படி, நாகர்கோவிலில் இருந்து சென்னை வருவதற்கு பிளான் இருந்துள்ளது.. 90 பேர் கொண்ட அந்த குழு மதுரை வந்தடைந்துள்ளது.
மதுரை மீனாட்சி கோயில், நாகர்கோவில் பத்மநாதபுரம் கோவில் என கோயில் ஸ்தலங்களை சுற்றிப்பார்க்க இவர்கள் வந்திருக்கிறார்கள். அப்போது, விடிகாலையில், மதுரை ரயில் நிலையத்தில் இந்த கோச் நிறுத்தி வைக்கப்பட்டபோதுதான், தீ பிடித்துள்ளது.
பரிதாபம்: விடிகாலை 4.30 மணிக்கு தூங்கி கொண்டிருந்ததால், என்ன நடந்ததே என்று தெரியவில்லை என்கிறார்கள் பக்தர்கள். அந்த நேரத்தில் கண்விழித்தவர்கள் மட்டுமே உயிர்பிழைத்துள்ளனர்.. அதிலும் ஆன்மீக பயணம் என்பதால் பெரும்பாலும், வயதானவர்களே வந்திருக்கிறார்கள். இவர்களால் உடனடியாக கீழே இறங்க முடியவில்லை.. இதனாலேயே இவர்கள் கருகி உயிரிழந்ததாக சொல்கிறார்கள்.
சிலிண்டர் விபத்து: இந்த தீ விபத்துக்கு காரணம், சமையல் கேஸை பயன்படுத்தியதுதான் என்கிறார்கள்.. அதாவது, இந்த ரயிலில் இருந்த பக்தர்கள், கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி சமையல் செய்ததால்தான், தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கேஸ் சிலிண்டர்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த சிலிண்டர்கள் எப்படி ரயிலுக்கு வந்தது? என்ற விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
காலையில் பயணிகளில் யாரோ ஒருவர், கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி டீ போட்டதாகவும் சொல்கிறார்கள்.. அங்கு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த பெட்டியில் இருந்தவர்கள், வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரை சட்டவிரோதமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்..
ரயில் பயணங்களின்போது, சமையல் சிலிண்டரை எடுத்து செல்லக்கூடாது.. அப்படியிருந்தும், கேஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது எப்படி? இதை முறையாக யாரும் சோதனை செய்யவில்லையா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன..
வயதானவர்கள்: அதேபோல, இந்த பெட்டியிலுள்ளவர்கள் யாராவது அதிகாலை நேரம் சிகரெட் பிடித்தார்களா? இதன்காரணமாக, தீ பிடிக்க வாய்ப்பிருந்திருக்குமா என்றும் விசாரணை நடந்து வருகிறது. அவசரத்துக்கு உடனடியாக கீழே இறங்க முடியாமலேயே, வயதான பெரியவர்கள் கருகி கருகியே இறந்துபோயிருப்பது, பதற செய்துவருகிறது.












Click it and Unblock the Notifications