மதுரை மக்களே! இன்று வெளியே செல்லும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க! பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்
மதுரை: தென்மாவட்ட மாணவர்கள், போட்டி தேர்வாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்கு வரப்பிரசாதமாக உருவாகியுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறக்கப்படுகிறது. இந்நிலையில், நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரைக்கு என பல அடையாளங்கள் இருக்கின்றன. இத்துடன் புது அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் உருவாகியுள்ளது. புதுநத்தம் சாலையில், தரைதளத்துடன் கூடிய 6 தளங்கள் கொண்ட இந்த நூலகம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானம் இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நிறைவடைந்தது. ரூ.215 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நூலகம் தென்மாவட்ட மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதனையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, "மதுரை-புதுநத்தம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலைஞா் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா, பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலையில் வருகை தருகிறாா். இதை முன்னிட்டு, நகரில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் லாரிகள் ஆகியவற்றின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
நூலகத் திறப்பு விழா நடைபெறும் நத்தம் சாலையில் ஐஓசி ரவுண்டானா சந்திப்பு முதல் ஆத்திகுளம் சந்திப்பு வரை வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்படுகிறது. இந்த வழியாக வரும் வாகனங்கள் ஐஓசி ரவுண்டானா, பாண்டியன் ஹோட்டல் சந்திப்பு, தாமரைத் தொட்டி, கோ.புதூா், மூன்றுமாவடி வழியாக ஐயா்பங்களா சந்திப்பு புதுநத்தம் சாலைக்குச் செல்லலாம். இதேபோல, நத்தம் சாலையில் இருந்து மூன்றுமாவடி, கோ.புதூா் வழியாக மதுரை நகரின் உள்பகுதிக்கு வரலாம்.

காலை 9 மணி முதல் கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக நகா் நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் கப்பலூா், தோப்பூா் வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். மேலும், காலை 9 மணி முதல் கப்பலூா் சந்திப்பிலிருந்து சுற்றுச் சாலை வழியாக நகா் நோக்கி வரும் அனைத்துப் பேருந்துகளும் தோப்பூா், திருநகா், திருப்பரங்குன்றம் வழியாக மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களுக்கு வர வேண்டும்.
அருப்புக்கோட்டை, தூத்துக்குடி பகுதியிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் வலையங்குளம், சாமநத்தம், பொட்டப்பாளையம், கீழடி வழியாக ராமேசுவரம் சாலையை அடைந்து விரகனூா் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணிக்கு வர வேண்டும். தூத்துக்குடி, அருப்புக்கோட்டை சாலையிலிருந்து வரும் அனைத்து சரக்கு, கனரக வாகனங்களும் கப்பலூா் சென்று திண்டுக்கல் சாலையில் வர வேண்டும்" என்று மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications