தற்கொலைக்கு முயன்ற மாணவி.. மூடப்பட்ட ரயில்வே கேட்.. சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்.. நடந்த துயரம்
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ரயில்வே கேட் மூடப்பட்டதால் தற்கொலைக்கு முயன்ற கல்லூரி மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றும் காப்பாற்ற முடியாமல் போனது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விருசங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்வருடைய மகள் பிரபாவதிக்கு 18 வயதாகிறது. இவர் மதுரை கப்பலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வந்திருக்கிறார்

குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த பிரபாவதி செவ்வாய்கிழமை காலை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பிரபாவதியை கயிற்றில் இருந்து மீட்டார்கள்
உடனே அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அழைத்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருமங்கலத்திலிருந்து புறப்பட்ட ஆம்புலன்சு, வரும் வழியில் ரயில்வே கேட் மூடப்பட்டதால் நின்றது.
திருமங்கலத்தில் சென்னை-நெல்லை மெயின் ரயில் பாதை அமைந்துள்ளதால் ரயில்கள் அடுத்தடுத்து காலை நேரத்தில் வரும். இதன் காரணமாக ரயில்வே கேட் மூடப்படுவது வழக்கம். அதன்படியே நேற்று ரயில் வருவதற்காக கேட் மூடப்பட்டது. இதன் காரணமாக
ஆம்புலன்சும் மற்ற வாகனங்களுடன் நீண்ட நேரம் காத்திருந்தன.
இதற்கிடையே நீண்டநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பரிதவித்து போனார்கள்.ரெயில்வே கேட் மூடப்பட்டதால் அங்கு ஆம்புலன்ஸ் நிற்பதை அறிந்து இருசக்கர வாகனத்தில் நடுவே பிரபாவதியை அமரவைத்து, அவசரம் அவசரமாக திருமங்கலம் ரயில்வே கேட் பகுதிக்கு அழைத்து சென்றார்கள்

ஆனால் அங்கேயும் துயரமான நிலையே ஏற்பட்டது. ஏனெனில் இருசக்கர வாகனத்தால் ரயில்வே கேட் பகுதியை நோக்கி முன்னேறி செல்ல முடியாத அளவிற்கு ஏராளமான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றனர். அந்த பகுதியில் நின்றவர்கள் உதவி செய்ய ஓடி வந்தனர். ஆனாலும் ரயில்வே கேட் காரணமாக ஆம்புலன்சில் மாணவியை ஏற்ற முடியாத நிலை நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே மதுரை-செங்கோட்டை ரயில் கடந்து சென்றதும் ரயில்வே கேட் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், பிரபாவதியை தூக்கிச்சென்று அவசர அவசரமாக 108 ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மாணவி பிரபாவதியின் உடலை பார்த்து உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுததை பார்த்தால் கல் நெஞ்சையும் கரைத்து விடும்.
ரயில்வே கேட் வரும் வரை மாணவி உயிரிழக்கவில்லை. ஒருவேளை ரயில்வே கேட் பூட்டப்படாமல் இருந்திருந்தால் பிள்ளையை காப்பாற்றி இருப்போம் என்றும் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர். திருமங்கலத்தில் காமராஜர்புரம், கற்பகம்நகர், சோனைமீனா நகர், விடத்தகுளம், விருசங்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள்மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் இதுவரை இந்த பகுதியில் பாலம் அமைக்கப்படவில்லை.
தினமும் திருமங்கலத்தில் பலமுறை ரயில்வே கேட் மூடப்படுவதால் மருத்துவமனைக்கு செல்வோரை பெரிய அளவில் பாதிக்கும் என்றும், இதுபோன்று இன்னொரு உயிர் போகும் முன்பு மேம்பாலம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications