மதுரை தெப்பக்குளத்தை பார்த்து 2 மணி நேரமாக குரைத்த நாய்.. வேகமாக வந்த தீயணைப்பு படை.. என்ன நடந்தது?
மதுரை தெப்பக்குளத்தை பார்த்து நாய் ஒன்று இரண்டு மணி நேரமாக விடாமல் குரைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை: மதுரை தெப்பக்குளத்தை பார்த்து நாய் ஒன்று இரண்டு மணி நேரமாக விடாமல் குரைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மாலைதான் அந்த சம்பவம் நடந்தது. மதுரை தெப்பக்குளம் அருகே நாய்கள் பொதுவாக சுற்றுவது வழக்கம். அதேபோல்தான் நேற்று தெப்பக்குளத்தின் படித்துறையில் நாய்கள் சுற்றி வந்தது.
ஆனால் ஒரு நாய் மட்டும் திடீர் என்று தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தை நோக்கி தொடர்ந்து குரைத்து வந்தது. விடாமல் 2 மணி நேரமாக தெப்பக்குளத்தை பார்த்து குரைத்தது.

சந்தேகம்
பொதுவாக இப்படி நாய் தண்ணீரை பார்த்து குரைத்தால், தண்ணீருக்குள் ஏதாவது இருக்க வாய்ப்புள்ளது. அதாவது உள்ளே யாராவது மூழ்கி இருக்கலாம். அல்லது நாயின் குட்டி உள்ளே சிக்கி இருக்கலாம் . வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருக்கலாம். நாய்களுக்கு உணரும் திறன் அதிகம் என்பதால் தெப்பக்குளத்தை பார்த்து நாய் குரைத்தது சந்தேகத்தை எழுப்பியது.

உள்ளே சென்று தேடினார்கள்
இதனால் அந்த பகுதியில் இருந்த மக்கள் சிலர் தண்ணீருக்கு உள்ளே சென்று தேடினார்கள். நாய் குரைக்கும் பகுதியை நோக்கி சென்று, உள்ளே தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு எங்கு எதுவும் கிடைக்கவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இவர்கள் உள்ளே தேடிபார்த்தனர். ஆனால் அந்த குரைப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை.

தீயணைப்பு படை
இதையடுத்து சந்தேகம் அதிகரிக்கவே உடனே தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வேகமாக அங்கே வந்து சோதனைகளை மேற்கொண்டார்கள். 10க்கும் அதிகமான வீரர்கள் அங்கே வந்தனர். குளத்தின் அனைத்து பகுதிக்குள் சென்றும் வேகமாக தேடினார்கள். உள்ளே யாராவது விழுந்து விட்டார்களா, ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டதா என்று தீவிரமாக சோதனை செய்து இருக்கிறார்கள்.

நீண்ட சோதனை
சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த சோதனை நீண்டு இருக்கிறது. ஆனால் இந்த சோதனையின் முடிவில் உள்ளே எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. குளத்தில் இருந்து எதுவும் மீட்கப்படவில்லை. ஆனால் நாய் அங்கே தொடர்ந்து குரைத்தபடியே நின்று கொண்டு இருந்தது. ஒரு நாயின் குரைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கே வந்ததும், தீவிரமாக தேடுதல் பணிகளை செய்ததும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications