மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரூ. 20 ஆயிரத்தோடு காணாமல் போன பை.. முதியவருக்கு உதவிய ஆசிரியர்.. மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் முதியவர் ஒருவர் தவறவிட்ட 20 ஆயிரம் ரூபாயை போலீசார் உதவியுடன் ஆசிரியர் ஒருவர் அவரிடம் கொண்டு சேர்த்த நிகழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

மதுரை விளாச்சேரி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ஜலீல் என்பவர் வங்கிக்கு பணம் போடுவதற்காக சென்று இருக்கிறார். பைக்கில் சென்ற அவர் வெள்ளை நிற பையில் 20 ஆயிரம் பணம் வைத்துள்ளார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வங்கி கணக்கில் போடுவதற்காக எடுத்து சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே பண பை அவரின் பைக்கில் இருந்து தவறி விழுந்துள்ளது.

சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்சேலம் சென்றாய பெருமாள் கோவிலில் நில ஆக்கிரமிப்பு.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

முக்கிய ஆவணம்

முக்கிய ஆவணம்

இதில் பணம் மட்டுமின்றி முக்கியமான பல ஆவணங்கள் இருந்துள்ளது. அவரின் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகிவையும் கூட இதில் இருந்துள்ளது. பணத்தை தொலைத்துவிட்டு ஜலீல் அதை நீண்ட நேரம் சாலையில் தேடி இருக்கிறார். பணத்தை தொலைத்த விரக்தியில் அவர் மனஉளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறார்.

போலீசார்

போலீசார்

இந்த நிலையில் இன்னொரு பக்கம் அந்த பணப்பையை சாலையில் கண்டு எடுத்து இருக்கிறார் ஆசிரியர் ரமேஷ்பாபு. இவர் தனக்கன்குளம் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். பணப்பையை பார்த்ததும் உடனடியாக அதை போலீசிடம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எந்த யோசனையும் இன்றி உடனே அதை போலீசாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸ் என்ன செய்தனர்

போலீஸ் என்ன செய்தனர்

இதையடுத்து போலீசார் மூலமா அந்த ஆதார் கார்டில் இருக்கும் எண்ணுக்கு போன் செய்து ஜலீலுக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. உங்கள் பணம் இங்கேதான் இருக்கிறது. வாருங்கள் என்று அவருக்கு தெரிவிக்கவிக்கப்பட்டது. அப்போது திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கீதாரமணி அங்கு பணியில் இருந்துள்ளார். அவர்தான் தகவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    மதுரையில் அசத்தும் மாஸ்க் புரோட்டா.. நாடு முழுவதும் வைரல்
    பாராட்டு பெற்றார்

    பாராட்டு பெற்றார்

    இதையடுத்து அங்கு வந்த ஜலீல் போலீசாரிடம் இருந்து பையை பெற்றுக்கொண்டார். அவரின் பையில் 20 ஆயிரம் ரூபாயில் ஒரு ரூபாய் கூட குறையாமல் அப்படியே இருந்தது. போலீசாருக்கும் அந்த ஆசிரியருக்கும் இதனால் ஜலீல் நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் மதுரையில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    A headmaster helped to the old man to get back his missed 20000 Rs in Madurai yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X