மதுரை நகைக்கடை வழக்கில் எப்ஐஆர் மூலம் தெரிய வந்த பெரிய உண்மை.. வெளியான முழு விவரம்
மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை வழக்கில் எப்ஐஆர் விவரங்கள் வெளியாகி உள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில், 5 கோடித்து 62 லட்சத்து மதிப்புள்ள 15 கிலோ தங்கம், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி என ஒட்டுமொத்ததமாக 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் திருடு போயிருக்கிறது என்று பாலசுப்பிரமணியன் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் முனீஸ்வரி என்ற சார்பு ஆய்வாளர் பதிவு செய்துள்ளர்.
இந்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்ற விவரங்கள்
புகார்தாரர் விவரம்:
பெயர்: A. பாலசுப்பிரமணியன் (வயது 66)

வழக்கு மற்றும் காவல் நிலைய விவரங்கள்:
காவல் நிலையம்: சி3 எஸ்.எஸ். காலனி (குற்றப்பிரிவு) காவல் நிலையம், மதுரை மாநகர்
குற்ற எண் மற்றும் சட்டப்பிரிவுகள்: 562/2026, U/s. 331(4), 305(a) BNS
வழக்குப் பதிவு செய்த நாள் மற்றும் நேரம்: 12.11.2026, மாலை 16.00 மணி (4:00 PM)
வழக்குப் பதிவு செய்த அதிகாரி: K. முனீஸ்வரி, சார்பு ஆய்வாளர்
குற்றம் சாட்டப்பட்டவர் விவரம்: தெரியாத நபர்கள்
புகார் அளிப்பதில் தாமதத்திற்கான காரணம்: வாதியால் தாமதம்

களவாடப்பட்ட சொத்துக்களின் விவரம்:
தங்க நகைகள் (15 கிலோ கிராம்): மதிப்பு ₹5,62,50,000.00 (5 கோடித்து 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)
வைர நகைகள் (3 கிலோ கிராம்): மதிப்பு ₹10,00,00,000.00 (10 கோடி ரூபாய்)
மொத்த மதிப்பு: ₹15,62,50,000.00 (15 கோடித்து 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்)
எப்ஐஆரில் குறிப்பிட்ட தகவல்கள் விவரம், "புகார்தாரரான பாலசுப்பிரமணியன், மதுரை காளவாசல் பைபாஸ் ரோடு, ஜீசஸ் கால் சர்ச் அருகில் 'Sri Chima Associates' என்ற பெயரில் நிறுவனம் பதிவு செய்து, டைட்டன் கம்பெனி லிமிடெட் (தனிஷ்க் ஜுவல்லரி - Tanishq Jewellery) நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து 14.10.2026 முதல் நகைக்கடை (ஷோரூம்) நடத்தி வருகிறார். 12.11.2026 அன்று காலை சுமார் 9.45 மணிக்கு ஷோரூமைத் திறக்க வந்த ஸ்டாக் இன்சார்ஜ் A.G. கீர்த்திகா, கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது முதல் தளத்தில் உள்ள தங்க வளையல்கள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகள் சிதறிக்கிடந்தன.
தனிஷ்க் கொள்ளை.. நிஷாந்த், மீனாட்சி ஆட்டம் ஓவர்.. மீனாட்சியின் அம்மா பக்கம் திரும்பிய போலீஸ்
அதனை பார்த்தவுடன் உடனே வருமாறு எனக்கும் கிளை மேலாளர் ராகுலுக்கும் போன் மூலம் தகவல் தெரியப்படுத்தினார். நானும் ராகுலும் ஷோருமுக்கு வந்து பார்த்துவிட்டு, எங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ராகுல், கீர்த்திகா, நர்மதா, யமுனா மற்றும் டைட்டன் ஏரிய பிஸ்னஸ் மேனேசார் அருன்சோஸ்வா ஆகியோர்களுடன் நகைகளை மேலோட்டமா சரிபார்த்த போது நேற்று இரவு கடை மூடும் பொழுது ஸ்டாக்லிஸ்டில் 3324 என்ற எண்ணிக்கை அதன் மொத்த எடை 40 Kg 957 கிராம் இருந்தது.

அதில் தோரயமாக 15kg முதன் 18 Kg வரையிணா நகைகள் திருடுபோய் இருக்க வாய்புள்ளதாக தெரிகிறது. திருடுபோன நகைகளை துல்லியமாக எடை சரிபார்த்த பின்பு இந்த திருடுபோன நகையின் எடை கூடவோ குறையவோ செய்யலாம். திருடு போன நகைகளில் தங்க நகைகள், வைர நகைகள் அடங்கும்.
எனவே கடையை சுற்றி பார்த்த போது கடையின் பிரதான கடவுகளின் பூட்டுகள் எதும் உடைக்கப்படாமல் இருந்ததால். சந்தேகத்தில் பேரில் மொட்டை மாடியில் சென்று பார்த்த போது லிப்ட் இயங்குவதற்காக கட்டப்படுத்திருந்த கட்டிடத்தின் வென்டிலேட்டர் ஒப்பன் உடைக்கப்பட்டு இருந்தது. எனவே எனது கடையின் புகுந்து திருடிய நபரை கண்டுபிடித்து திருடுபோன எனது நகைகளை கண்டுபிடித்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு பாலசுப்பிரமணியன் புகாரில் கூறியிருந்தார்.



Click it and Unblock the Notifications
