மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இன்னைக்கு ஒரு புடி! மதுரையில் மாஸ் காட்டிய அமைச்சர் மூர்த்தி! வெளுத்து கட்டிய உடன்பிறப்புகள்! என்னவாம்?

Google Oneindia Tamil News

மதுரை : மதுரையில் அமைச்சர் மூர்த்தி நடத்திய செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு மீன்,ஆட்டுக்கறி, கோழிக்கறி, முட்டை,வாழைப்பழம், பிரியாணி அடங்கிய அசைவ விருந்தும், கூட்டு, காய்கறி, பொரியல், ரசம், மோர்,சாம்பார், குழம்பு என சைவ வகையும் விருந்தாக அளிக்கப்பட்டது.

மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள துவாரகா திருமண மண்டபத்தில் மதுரை வடக்கு,மதுரை மாநகர், மதுரை தெற்கு, திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர் மூர்த்தி, மாநகர மாவட்டச் செயலாளர் தளபதி உள்ளிட்ட நிர்வாகிகள்,ஆயிரத்துக்கு மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வருகின்ற நவ.29-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க வரும் உதயநிதி ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

குளமாக தேங்கிய மழை நீர்.. உண்ணாவிரதம்..மேயருக்கு எதிராக மல்லுக்கட்டும் அமைச்சர் மூர்த்திகுளமாக தேங்கிய மழை நீர்.. உண்ணாவிரதம்..மேயருக்கு எதிராக மல்லுக்கட்டும் அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி

அமைச்சர் மூர்த்தி


இந்த விழாவில் பேசிய அமைச்சர் மூர்த்தி," மதுரை வடக்கு, மாநகர், தெற்கு ஆகிய மூன்று மாவட்டமும் இணைந்து ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடத்துகிறோம். இனி யாராலும் மதுரை மாவட்டத்தை அசைக்க முடியது ஆட்ட முடியாது. மதுரை மாவட்ட திமுகவில் ஏதோ சோர்வு இருப்பது போல பேசி வருகின்றனர். ஆனால் முதல்வர் ஆணைப்படி செயல்பட்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை, விருதுநகர், தேனி மூன்று தொகுதிகளில் அதிகப்படியான வாக்குகள் பெற்று வெற்றி பெற வைப்போம்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

இளைஞர்களுக்கு நலத்திட்டம் வழங்க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் 29ம் தேதி வருகை தந்து 15 ஆயிரம் இளைஞர்களுக்கு நலத்திட்டதை வழங்குகிறார். இந்த நலத் திட்டம் வழங்கும் விழாவில் 15 ஆயிரம் பேர் பங்கேற்கும் ஒரு சிறிய மாநாட்டை போல அமைய உள்ளது. இது நாடாளுமன்றத் தேர்தலுக்கான அமையும். தென் மாவட்டத்தில் மதுரையின் பிரதிபலிப்புத்தான் நாடு முழுவதும் பிரதிபலிக்கும். எதிரிகளுக்கு சவாலாக திமுகவின் கூட்டம் அமைய உள்ளது.

 மாநாடு நடத்த வாய்ப்பு

மாநாடு நடத்த வாய்ப்பு

நான் எல்லா விதமான கட்சி விழாக்களையும் நடத்திவிட்டேன். எனது ஒரே ஆசை மதுரையில் ஓர் இளைஞர் அணி மாநாட்டை நடத்த வேண்டும் என்பதுதான் அது தொடர்பாக முதல்வர், இளைஞர் அணிச் செயலாளரிடம் பேசி வருகின்றேன். மாநாடு நடத்த வாய்ப்பு கிடைத்தால் திமுக வரலாற்றில் எந்த கட்சியும் நடத்தாத அளவிற்கான மாநாடாக நடத்திக் காட்டுவேன். இந்தியாவிற்கே முன்னோடியான ஓர் ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். இளைஞர் அணி மாநாடு நடத்தினால் அது ஓர் அச்சாணியாக அமையும் என பேசினார்.

அசைவ விருந்து

அசைவ விருந்து

செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற திமுகவினருக்கு மீன்,ஆட்டுக்கறி, கோழிக்கறி, முட்டை,வாழைப்பழம், பிரியாணி அடங்கிய அசைவ விருந்தும், கூட்டு,காய்கறி, பொரியல், ரசம், மோர்,சாம்பார், குழம்பு என சைவ வகையும் விருந்தாக அளிக்கப்பட்டது. முந்தியடித்துக் கொண்டு திமுகவினர் சென்று இடத்தைப் பிடித்து சாப்பாட்டை ருசி பார்த்து சென்றனர்.

English summary
The DMK members who participated in the functionaries' meeting held by Minister Murthy in Madurai were treated to a meal consisting of fish, mutton, chicken, egg, banana, biryani and vegetarian food such as vegetables, fries, rasam, buttermilk, sambar and gravy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X