ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்!
சென்னை: தவெகவிடம் இருந்து ராஜ்ய சபா சீட்டை காங்கிரஸ் கட்சி எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை வெளிப்படையாகவே கூறியுள்ளார். ராஜ்ய சபா சீட் குறித்து இறுதி முடிவை எடுக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக கூறிய செல்வப்பெருந்தகை, இந்தியா கூட்டணி தொடர்பாக முடிவுகளை டெல்லி தலைமையே எடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் நடந்த ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக சார்பாக ஒரு சீட் கொடுக்கப்பட்டது. இதன்பின் காங்கிரஸ் கட்சி சார்பாக கிறிஸ்டோபர் திலக் ராஜ்ய சபா எம்பியானார். ஆனால் தேர்தல் முடிவடைந்த பின் காங்கிரஸ் கட்சி தவெக உடன் கூட்டணி அமைத்தது. முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இணைந்தது.

தற்போது சிவி சண்முகம் ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜினாமா செய்ததால், அந்த இடத்திற்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 18ஆம் தேதி ராஜ்ய சபா இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதில் தவெக சார்பாக எந்த வேட்பாளர் நிறுத்தப்படுகிறாரோ, அவர்தான் வெற்றி பெற முடியும். இதனால் தவெகவிடம் இருந்து ராஜ்ய சபா எம்பி சீட்டை பெற காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதற்காக ஏற்கனவே காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். தற்போது தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னையில் முகாமிட்டுள்ளார். இதனால் ராஜ்ய சபா சீட் குறித்த விவாதங்கள் தீவிரம் அடைந்துள்ளன. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து செல்வப்பெருந்தகை பேசுகையில், இந்தியா கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை முடிவு எடுக்கும்.
ராஜ்ய சபா சீட் தொடர்பாக முடிவு எடுக்கும் இடத்தில் முதல்வர் விஜய் இருக்கிறார். காங்கிரஸ் சார்பாக ராஜ்ய சபா சீட் கேட்கிறோம். தேர்தலுக்கு பின் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து நன்றி கூறினேன். அப்போது கூட்டணி மாற்றம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பின் என் மகன் திருமணத்திற்கான அழைப்பிதழை கொடுக்க ஸ்டாலினை சந்தித்தேன்.
அரசியல் என்பது வேறு.. உறவு என்பது வேறு.. கலைஞர் 103வது பிறந்தநாள் விழாவிற்கு மலர் அஞ்சலி செலுத்துவது குறித்து கூட கேள்வி எழுப்புகிறார்கள். காலம் முழுவதும் உயிருள்ள வரை கலைஞர் நினைவிடத்திற்கு வந்து கொண்டே இருப்பேன். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications