மதுரை: மதுரையில் பார்சல் வாங்கிச் சென்ற உணவில் பிளேடு துண்டு இருந்ததால் பெண் அதிர்ச்சி அடைந்தார்.
மதுரை சோலையழகுபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது. இவரது மனைவி நேற்று மதிய உணவு சாப்பிடுவதற்காக ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கிச் சென்றார்.
இந்த நிலையில் வீட்டிற்கு சென்று சாப்பாடு பார்சலை பிரித்து பார்த்த போது உணவில் பாதி உடைந்த நிலையில் ஒரு பிளேடு இருந்ததை கண்டார். மீண்டும் மீண்டும் அதை பார்த்து அது பிளேடு என்பதை உறுதி செய்தார்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அந்த உணவுடன் அவர் சென்றார். அங்கிருந்த ஊழியரிடம் உணவில் பிளேடு துண்டு இருந்தது குறித்து கேட்டுள்ளார். அப்போது அந்த ஊழியர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முகமது உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்தில் புகார் செய்தார். அதன் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் முகமது மனைவி ஆர்டர் செய்த சாதத்தை சோதனை செய்ததோடு, உணவகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெள்ளை சாதம் எதுவும் அங்கு வைக்கப்படவில்லை.
மேலும் பணியாளர்களுக்கு மருத்துவச் சான்று இல்லாமல் தலையில் உறை அணியாமல் உணவுகளை சமைத்தது தெரியவந்தது. இதையடுத்து வாடிக்கையாளரிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்வதாக கடிதம் ஒன்றையும் உணவகம் எழுதிக் கொடுத்தது. மேலும் உணவுப் பாதுகாப்புத் துறை சுட்டிக் காட்டிய புகார்கள் குறித்து உணவகத்திற்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வியாபாரம் நோக்கில் செயல்படும் சில ஹோட்டல்கள் இதுபோல் கவனக்குறைவாக இருப்பதால் இது போன்று எலி தலை, பிளேடு துண்டு, கரப்பான்பூச்சி, பூரான் உள்ளிட்டவை உணவில் கிடக்கின்றன. ஊருக்கே சோறு போடும் அன்னபூரணியாக மக்கள் பார்க்கும் ஹோட்டல்களில் இது போன்று சில ஆபத்துகள் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு வேளை அந்த பிளேடு இருப்பது தெரியாமல் சாம்பாரை ஊற்றி பிசைந்த போது கையை அறுத்திருந்தால் என்ன செய்வது?
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications