தொட்டாலே தூக்கிடுவாங்க.. மெசேஜ் லிங்கில் வந்த ’எமன்’! வாட்ஸாப்பில் ‘மார்ஃபிங் படம்’ பதறிப் போன பெண்!
மதுரை: மொபைலில் மெசேஜில் வந்த லிங்கை கிளிக் செய்ததால் தற்போது கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக, பெண் மற்றும் அவரது குடும்ப புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் கோரி மிரட்டல் விடுவதாக கூறி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார் பெண் ஒருவர். இந்நிலையில் இதுபோன்ற மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில் கவனமாக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார்.
டாக்குமெண்ட் வேண்டாம், செக் லீப் வேண்டாம், கையெழுத்து கூட வேண்டாம் மொபைல் போனில் அப்ளை செய்தால் அடுத்த நொடியே உங்கள் அக்கவுண்டில் பணம் கிடைக்கும் என ஆன்லைன் சூதாட்டங்களை போல மக்களிடம் பணம் பறிக்கும் லோன் ஆப்களின் கொடூரம் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது.

கேட்டவுடன் பணம் கிடைக்கிறது என்பதற்காக பலரும் அதனை டவுன்லோட் செய்து ஆயிரக்கணக்கில் கடன் பெறும் நிலையில் அவற்றிற்கு ஆயிரக்கணக்கில் கொடூர வட்டி வசூலிக்கப்படுகிறது.
குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்தாவிட்டால் கடன் பெற்றவர்களையும் அவர்களது குடும்பத்துப் பெண்களையும் ஆபாசமாக சித்தரித்து whatsapp மூலம் புகைப்படங்கள் பரப்பப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என அரசும் ரிசர்வ் வங்கியும் எச்சரித்தும் பொது மக்களின் விழிப்புணர்வின்மை காரணமாக கடன் செயலிகளின் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் புதுவித மோசடியாக கடன் பெறாமலேயே செல்போனுக்கு வந்த லிங்கை தொட்டதால் கடன் பெற்றதாக கூறியதோடு ஆபாச புகைப்படங்களை அனுப்பி மிரட்டுவதாக மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பரபரப்பு புகாரை கிளப்பியுள்ளார். மதுரையச் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவருக்கு மொபைல் போனில் கடந்த சில நாட்களுக்கு முன் மெசேஜில் லிங்க் ஒன்று வந்துள்ளது. அதை என்னவென்று பார்ப்பதற்காக கிளிக் செய்துள்ளார். அதில் ஆன்மூலம் லோன் தருவதாக வந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்கை விட்டு வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அதில் 3 ஆயிரம் லோன் எடுத்துள்ளீர்கள் அதற்கான தொகையை கட்டுமாறு கூறியுள்ளனர். அவர்களிடம் நான் லோன் வாங்கவே இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் நீங்கள் லோன் வாங்கியுள்ளீர்கள் கட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளனர். அந்த பெண் முடியாது என கூறவே தொடர்ந்து போன் செய்து சார்ச்சர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து அதனை ஆபாச வீடியோவாக சித்தரித்து அவருக்கே அனுப்பி லோன் தொகையை கட்டவில்லை என்றால் அனைவருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுபோன்ற மோசடிகள் அதிகமாக அரங்கேறி வரும் நிலையில், யாரும் தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம், அது போன்ற லிங்குகளை யாருக்கும் பார்வேட் செய்ய வேண்டாம், அது போல லிங்குகள் வந்தால் உடனடியாக அதை டெலிட் செய்ய வேண்டுமெனவும், மீது இது போன்ற மிரட்டல்கள் வந்தால் உடனடியாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார் அளிக்க வேண்டுமென போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications