ஆடி 18 தாய்மாமன்கள் தினம்.. தாய்க்கு சமமான தாய்மாமன்களுக்கு மரியாதை செய்யும் மகத்தான நாள்
மதுரை: தொப்புள் கொடி உறவுக்கு அடுத்தபடியாக தொட்டில் முதல் மணமேடை வரை தொடரும் ஒரு உறவு உண்டு என்றால் அது தாய்மாமன் உறவுதான். தமிழகத்தில் தாய்மாமன் உறவை போற்றுவதைப் போல வேறு எங்கும் கொண்டாடி மகிழ்வதில்லை.
அன்னையர் தினம், தந்தையர் தினம், சகோதரர்கள் தினம் கொண்டாடி மகிழ்கின்றனர். ஏன் சில நேரங்களில் கொழுந்தியாள் தினம் கூட இன்றைய கால கட்டத்தில் கொண்டாடுகின்றனர். தாய்க்கு சமமான உறவு உண்டு என்றால் அது தாய்மாமன்தான் அந்த தாய் மாமனுக்கு மரியாதை செய்வதற்காகவே தாய்மாமன் தினம் தமிழக தென் மாவட்டங்களில் கொண்டாடப்படுகிறது.
உடன் பிறந்த தங்கைக்கோ... அக்காவிற்கோ பிள்ளை பிறந்தால் முதல் ஆளாய் சீர் கொண்டு வருவது தாய் மாமன்தான். பிள்ளை பிறந்த உடன் குழந்தையின் நாக்கில் சீனி தண்ணீர் தொட்டு வைப்பதில் தொடங்குகிறது தாய் மாமன் உறவு.

தாய் மாமன் உரிமை
மடியில் அமரவைத்து மொட்டையடித்து காது குத்துவது தொடங்கி பெண் குழந்தைகள் என்றால் வயது வந்த உடன் குடிசை கட்டுவது வரை தாய் மாமன் உறவை யாராலும் விட்டுத்தர முடியாது. கிழக்கு சீமையிலே படத்தில் வரும்...தாய் மாமன் சீர் சுமந்து வாராண்டி... பாடல்தான் எந்த விஷேசம் என்றாலும் பல ஆண்டு காலமாக பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

மாமனுக்கு மரியாதை
தென்மாவட்டங்களில் தாய்மானுக்கு என்று தனி மரியாதையே உள்ளது. தாய்க்கு நிகராக உரிமை கொண்டாடும் தாய்மாமன்தான் எல்லாமே. எந்த ஒரு விசயத்திற்காகவும் தாய் மாமனை அவ்வளவு சீக்கிரத்தில் விட்டுக்கொடுத்து விட மாட்டார்கள். மண மேடையில் மாப்பிள்ளையோ பெண்ணோ கழுத்தில் மண மாலையை போடுவது தாய்மாமன்தான்.

உரிமையான உறவு
பிறந்த பிள்ளைய திருமணம் செய்து கொடுக்கும் போது தாய்மாமன் சம்மதம் சொன்னால்தான் நிச்சயமே நடக்கும். அந்தளவுக்கு தாய்மாமன் உறவு வலுவானது. தாய்மாமான் வீட்டு சீதனம் முக்கியமானது. எத்தனையோ பேர் சீர் செய்தாலும் ஊர் மெச்ச தாய் மாமன் செய்யும் சீர்தான் சபையை நிறைக்கும். எத்தனையோ சொந்தங்கள் வீட்டு விசேஷத்திற்கு வந்தாலும் தாய்மாமன் வந்தால்தான் வீடு நிறையும்.

விட்டுப்போகாத சொந்தம்
ஆடி பதினெட்டாம் பெருக்கன்று தாய் மாமன் தினமாக கொண்டாடும் மக்கள் அந்த தாய் மாமனுக்கு கிடா விருந்து எல்லாம் வைத்து அமர்களப்படுத்துகின்றனர். தாய் மாமன் காலில் விழுந்தும் ஆசி பெற்றுக்கொள்கின்றனர். எத்தனை எத்தனை உறவுகள் இருந்தாலும் விட்டுப்போகாத சொந்தம்தான் தாய் மாமன் பந்தம் என்று சொல்லி மகிழ்க்கின்றனர் தமிழக பெண்கள். தனது சகோதரன் உயிரிழந்து விட்டான் என்பதற்காக அவரைப்போலவே மெழுகுச்சிலை செய்து தாய் மாமனின் உறவை புரிய வைத்தவர்கள் தென் மாவட்ட பெண்கள். சும்மாவா சொன்னாங்க தாய் மாமன் உறவுங்கிறது தாய்க்கு சமமான உறவு என்று. தாய்மாமனை போற்றும் அனைவருக்கும் இனிய தாய் மாமன் தின நல் வாழ்த்துக்கள்
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications