நேத்துதான் கல்யாணமாச்சு.. இதோ.. அடுத்த போராட்ட களத்துக்கு கிளம்பி விட்டார் நந்தினி
டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக நந்தினி அறிவித்துள்ளார்
Recommended Video
மதுரை: நேத்துதான் கல்யாணம் ஆச்சு.. அதுக்குள்ள அடுத்த போராட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டுவிட்டார் நம்ம நந்தினி!
மதுக்கடைகளுக்கு எதிராக சின்ன வயசில் இருந்தே போராடி வருபவர் நந்தினி. இவரது தந்தை ஆனந்தனின் துணையுடன் டாஸ்மாக் உட்பட பல்வேறு சமூக பிரச்னைகளுக்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். அது எவ்வளவு பெரிய பிரச்னை என்றாலும் சரி, பக்கத்தில் தந்தை இருந்தால் போதும்.. தைரியத்துடன் போராட்டத்தில் குதித்துவிடுவார் நந்தினி.
யாருடனும் தன்னை இணைத்து கொள்ளாமல் தன்னந்தனியாக போராடி வரும் நந்தினிக்கு நேத்து தான் பல பிரச்சனைகளுக்கு நடுவில் கல்யாணம் நடந்தது. இப்போது அடுத்த அறிவிப்பை வெளியிட்டு விட்டார். போராட்டம் எங்கே தெரியுமா.. தேர்தல் நடக்க போகிற வேலூர் தொகுதியில்தான்!

சிறை
இது சம்பந்தமாக பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி இருப்பதாவது: "சிறைங்கறது நமக்கு பல அனுபவங்களை கத்து குடுக்கறது. வெளியில சமுதாயத்தில் நடக்கக் கூடிய பிரச்சனைகளின் பிரதிபலிப்புதான் சிறை. போன மாசம் 27-ம் தேதி என்னையும் அப்பாவையும் சிறையில் அடைச்சாங்க. முந்தா நாள் வெளியில வந்தோம்.

உறுதி
13 நாள் சிறைவாசம் என்பது எனக்கு தைரியத்தையும், உறுதியையும் குடுத்திருக்கு. கொலை, திருட்டு, தவறான உறவுமுறைகளால் கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆயுள் தண்டனை கைதிகளும் இருக்கிறார்கள். உங்களுக்கு எதனால இப்படி ஆச்சுன்னு நான் நிறைய பேர்கிட்ட போய் பேசினேன். அதில் பெரும்பாலான பெண்கள் சொன்னது, கணவன்மார்களின் குடிப்பழக்கம்தான்.

மதுப்பழக்கம்
குடும்பத்தையே அந்த குடிப்பழக்கம் சீரழிச்சதால்தான், பெண்களையே குற்றவாளிகளாக சிறைக்குள் தள்ளி, இவர்களின் குழந்தைகள் அனாதைகளாக மாற்றியிருக்கிறது. அப்பா இருந்த ஆண்கள் சிறையில் 80 சதவீதம் குற்றவாளிகள் சின்ன சின்ன பசங்களாக இருந்தார்களாம். அவங்க குடிச்சிட்டு போதையில கொலை பண்ணதா சொல்லி இருக்காங்க.

நீதித்துறை
தமிழகத்தை குற்றவாளிகளின் கூடாரமாக மாற்றி கொண்டிருக்கிறது தமிழக அரசு. நீதித்துறையோ, கண்டுக்கொள்ளாமல் டாஸ்மாக்கை மூடவும் உத்தரவிடாமல் உள்ளது. தமிழக அரசும் நீதித்துறையும் சேர்ந்து குடி-ங்கற ஒரு விஷயத்தை வெச்சு மக்களை நாசப்படுத்திட்டு இருக்காங்க. இதையெல்லாம் கண்டிப்பா கண்டிச்சு போராட்டம் பண்ணுவோம்.

பிரச்சாரம்
வேலூர் தொகுதியில் ஆகஸ்ம் 5-ம் தேதி நிறுத்தப்பட்ட தேர்தல் நடக்க இருக்கிறது. இன்றைக்கு அதற்கான வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. வேலூர் தொகுதியில் மக்களை வீடு வீடாக தனித்தனியாக சந்திச்சு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறோம்.

டாஸ்மாக் கடைகள்
மக்களை ஒன்றுதிரட்டி வேலூர் தொகுதியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரம் ஒவ்வொருத்தரையும் தனித்தனியா சந்திச்சு, கண்டிப்பா டாஸ்மாக் விஷயத்துக்கு முடிவு கட்டலாம்னு பிரச்சாரம் செய்ய போறோம். மக்கள் எல்லாரும் ஒத்துழைப்பு தாங்க" என்று தெரிவித்துள்ளார்.
-
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications