ஆதவ் அர்ஜுனா வருகையால் தவெகவில் பிரச்சினையா? எனக்கு பதவி கொடுக்காதது ஏன்? போட்டுடைத்த பிரபல நடிகர்!
மதுரை: நான் எந்த பொறுப்பையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை எனவும், ஆதவ் அர்ஜுனா வருகையால் தமிழக வெற்றிக் கழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை, புஸ்ஸி ஆனந்த் ஆலோசனையின் பேரில் தான் தேர்தலுக்காக ஆதவ் அர்ஜுனாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என நடிகரும் தமிழக வெற்றிக் கழக பிரமுகருமான நடிகர் செளந்தரராஜன் கூறியுள்ளார்.
மதுரை அழகர் கோவில் சாலை பகுதியில் இருக்கக்கூடிய தனியார் உணவு விடுதி நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகரும் தமிழக வெற்றிக் கழக பிரமுகருமான செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர்," தவெக அரசியல் பயணம் மிக சிறப்பாக உள்ளது மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. தவெகவின் அரசியல் பயணம் எப்படி இருக்கிறது என ஊடகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். கட்சிக்கு செயல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தில், நான் எந்த பொறுப்பையும் எதிர்பார்த்து வேலை செய்யவில்லை. எனக்கு எனது அண்ணன் அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்யவிருக்கிறார். அந்த வகையில் எனது எண்ணமும் அது தான்.
என்னுடைய எண்ணம் கட்சிக்கும் மக்களுக்கும் உண்மையாக இருக்கும் போது நேர்மையாக உழைக்கும் போது, பொறுப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரும். அது ஒரு பெரிய விஷயம் அல்ல. கட்சியில் நிறைய மாற்றங்கள் வரும். நல்ல விஷயங்களை நோக்கி நல்ல மாற்றங்கள் வரும். மாவட்டச் செயலாளர்கள் அறிவிப்புக்குப் பிறகு அவர்கள் அவர்களது பகுதிக்குள் வரும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

35 ஆண்டுகளாக மக்கள் பணி நிறைவு செய்து வந்தவர்கள் தற்போது அரசியல் கட்சியில் பொறுப்புக்கு வரும் போது நிச்சயமாக அவர்களுக்கு சந்தோஷம் கொண்டாட்டம் தேவைப்படுகிறது. ஆனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் இருக்கும். ஆனால் அதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இது தொடர்பாக தலைமை கழகத்திற்கு கூறியிருக்கிறோம். அதற்கான நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆதவ் அர்ஜுனா கட்சிக்கு வந்திருக்கிறார். நம்முடைய அரசியல் கட்சியில் எல்லா எண்ணம் உள்ளவர்களும் இருப்பார்கள். உதாரணத்திற்கு எனக்கு பொறுப்பு வரும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள்? தளபதி அண்ணனை புரிந்து கொள்ள வேண்டும். பொறுத்திருக்க வேண்டும். தளபதி அண்ணன் மேல் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இந்த மாதிரி குழப்பமும் விமர்சனமும் இல்லை. அப்படி இல்லாதவர்களுக்கு உணர வைக்க வேண்டியது எங்களது கடமை.
தேர்தல் பணிக்கான ஒரு பொதுச் செயலாளர் தேவை. தேர்தல் வியூகத்துக்காக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டிருக்கிறார். கட்சிக்கான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான். அதற்கு இதற்கும் சம்பந்தம் கிடையாது. கட்சியில் மக்கள் இயக்கத்தில் இருந்தவர்களுக்கு தான் மாவட்ட செயலாளர்கள் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் அனுபவம் உள்ளவர்களை அவர்கள் நியமித்திருக்கிறார்கள். இது அனைத்து கட்சியிலும் நடைபெறக் கூடியது. மற்றபடி ஏற்கனவே உழைத்தவர்களை புறக்கணிப்பதற்கான பணிகள் நடைபெறவில்லை.
நிச்சயம் புதியவர்கள் வருவார்கள். புஸ்ஸி ஆனந்த் அவர்கள் சொன்னது போல முதலில் விஜய் மக்கள் இயக்கத்தில் 30 ஆண்டுகளாக அடிப்படை பணிகளை செய்தவர்கள் மக்களுக்காக உழைத்தவர்களுக்கு பதவிகள் கொடுத்த பிறகுதான் புதிய வரவுகளுக்கு பதவி. ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் அவர்கள் சொல்வது போல் தான் நடந்து கொண்டிருக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நேரடி எதிரி திமுக மற்றும் பாஜக அதை நோக்கித்தான் எங்களது பயணம் இருக்கிறது" என்றார்.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ராகுல் காந்தியை முதலமைச்சர் விஜய் சந்திக்காதது ஏன்? பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த விளக்கம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
முதல்வர் விஜய்.. பதவியேற்ற 20 நாட்களில் 6 பெரிய சறுக்கல்கள்.. சொதப்பல் மேல் சொதப்பல்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications