நானும் மதுரைக்காரன் தான்! கட்சியை பற்றி அப்புறம் பேசலாம்! தமாஷாக பேசி எஸ்கேப் ஆன செல்லூர் ராஜூ!

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனை மற்றும் ரெய்டு தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிக்கொண்டார் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

மதுரை மாநகராட்சியில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தாம் பேசியதை செய்தியாக போடுமாறும் கட்சியை பற்றி பிறகு பேசுவதாகவும் ஜகா வாங்கினார்.

அதிமுக பிரமுகர்கள் வீடுகளில் நடைபெறும் ரெய்டு தொடர்பாக செய்தியாளர்கள் பல முறை கேட்டும், ''ஹேய் நானும் மதுரைக்காரன் தாம்ப்பா'' என தமாஸாக பேசி எஸ்கேப் ஆவதிலேயே குறியாக இருந்தார் செல்லூர் ராஜூ.

செல்லூர் ராஜூ

செல்லூர் ராஜூ


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்திக்கிறார் என்றால், நிச்சயம் அதில் ஒரு சர்ச்சைக்குரிய டாபிக்கை பேசியிருப்பார். ஆனால் இன்று மிகவும் உஷாராக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தொடர்பாகவோ அக்கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் வீடுகளில் நடக்கும் சோதனைகள் தொடர்பாகவே வாய் திறக்க மறுத்துவிட்டார். மதுரை சம்பந்தப்பட்ட கேள்விகளை மட்டும் கேட்குமாறும் மற்ற எதைப் பற்றியும் தாம் பேசமாட்டேன் எனவும் கூறிவிட்டார்.

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு

இன்னும் இரண்டு நாட்களில் அதிமுக பொதுக்குழு நடைபெறும் சூழலில் அது பற்றி செல்லூர் ராஜூ ஏதேனும் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிய கும்பிடு ஒன்றை போட்டுவிட்டு நடையை கட்டினார். பொதுவாக செல்லூர் ராஜூ இப்படி இருக்கமாட்டார், எதிர் விளைவுகளை பற்றி கொஞ்சம் கூட அஞ்சாமல் மனதில் தோன்றும் கருத்துக்களை மறைக்காமல் பேசக்கூடியவர். ஆனால் அவரே இன்று வாய் திறந்து பேச தயங்குவது முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

நானும் மதுரைக்காரன்

நானும் மதுரைக்காரன்

இதனிடையே மதுரை மாநகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும், குடிநீர் தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறிய அவர், இதைப்பற்றி மட்டும் செய்தி போடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். இதை போடுகிறோம் அதிமுக பஞ்சாயத்து பற்றி ஒரு வார்த்தையாவது பேசிட்டு போங்க சார் என செல்லூர் ராஜூவை செய்தியாளர்கள் கோரஸாக கேட்டபோது, ஹேய் நானும் மதுரைக்காரன் தாம்ப்பா என தமாஸாக பேசி எஸ்கேப் ஆகிவிட்டார்.

Recommended Video

    வழக்குகள் மூலம் அதிமுகவை அழிக்க முடியாது - ஜெயக்குமார்
    நிர்வாகம் மோசம்

    நிர்வாகம் மோசம்

    மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை மிக மோசமாக உள்ளதாகவும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளே மாநகராட்சி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டங்கள் நடத்தக் கூடிய அவலங்களை காண முடிவதாகவும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+